Friday, November 28, 2014

நவம்பர் 30 நிகழ்வுகள்



நவம்பர் 30 நிகழ்வுகள்
**********************************


1612 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படைகளுக்கும் போர்த்துக்கீசருக்கும் இடையில் இந்தியக் கரையில் சுவாலி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரித்தானியர் வென்றனர்.
1700 - சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் ரஷ்யப் படைகளை வென்றனர்.
1718 - நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்ல்ஸ் இறந்தான்.
1782 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் இரண்டுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது.
1803 - ஸ்பானியர்கள் லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரபூர்வமாகக் கையளித்தனர். பிரான்ஸ் இப்பிரதேசத்தை 20 நாட்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்றது.
1806 - நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றினர்.
1853 - ரஷ்யப் பேரரசின் கடற்படை வட துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் ஓட்டோமான் பேரரசின் படைகளைத் தோற்கடித்தன.
1872 - உலகின் முதலாவது அனைத்துலக காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது.
1908 - பென்சில்வேனியாவில் மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 154 பேர் கொல்லப்பட்டனர்.
1917 - முதலாம் உலகப் போர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் போரில் ஈடுபட்டு இறந்தார்.
1936 - லண்டனில் பளிங்கு அரண்மனை தீயினால் சேதமடைந்தது.
1939 - சோவியத் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டு குண்டுகளை வீசீன.
1943 - இரண்டாம் உலகப் போர்: டெஹ்ரானில் கூடிய அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் ஜூன் 1944 இல் ஐரோப்பாவைத் தாக்கும் தமது திட்டத்தை ஆராய்ந்தனர்.
1962 - பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட் ஐக்கிய நாடுகள் சபையின் 3வது பொதுச் செயலராகத் தெரிவானார்.
1966 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பார்போடஸ் விடுதலை பெற்றது.
1967 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை பெற்றது.
1967 - சுல்பிகார் அலி பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.
1981 - பனிப்போர்: ஜெனீவாவில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் பிரதிநிதிகள் ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள நடுத்தர ஏவுகணைகளைக் குறைக்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.
1995 - வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.

பிறப்புகள்
1825 - வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, பிரெஞ்சு ஓவியர் (இ. 1905)


1835 - மார்க் டுவெய்ன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1910)
1857 - பொபி எபில், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (இ. 1936)
1858 - ஜகதீஷ் சந்திர போஸ், இந்திய முதல் விண்ணலை அறிவியலாளர் (இ. 1937)
1869 - நில்சு குஸ்டாப் டேலன், சுவீடிய இயற்பியலாளர், பநோபல் பரிசு பெற்றவர் (இ. 1937)
1874 - வின்ஸ்டன் சர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரும், நோபல் பரிசு பெற்றவரும் (இ. 1965)
1950 - வாணி ஜெயராம், இந்தியப் பாடகி
1965 - பென் ஸ்டில்லர், அமெரிக்க நடிகர்
1982 - எலிஷா கத்பெர்ட், கனடிய நடிகை
1988 - பிலிப் ஹியூஸ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (இ. 12014)
1990 - மாக்னசு கார்ல்சன், நோர்வே சதுரங்க ஆட்டக்காரர், உலக வாகையாளர்

இறப்புகள்
1900 - ஆஸ்கார் வைல்டு, ஐரிய நாடகாசிரியர், எழுத்தாளர் (பி. 1854)
1930 - பொன்னம்பலம் இராமநாதன், இலங்கைத் தமிழ்த் தலைவர், அரசியல்வாதி (பி. 1851)
2012 - ஐ. கே. குஜரால், இந்தியாவின் 15வது பிரதமர் (பி. 1919)
2012 - முனீர் மலிக், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1931)

சிறப்பு நாள்
பார்போடஸ் - விடுதலை நாள் (1966)
புனித அந்திரேயா விழா - கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையார்களால் கொண்டாடப்படுகிறது.
புனித அந்திரேயா தினம் - இசுக்காட்லாந்து நாட்டில் தேசிய தினமாகவும், வங்கி விடுமுறை தினமாகவும் ஊள்ளது.

நவம்பர் 29 நிகழ்வுகள்

நவம்பர் 29 நிகழ்வுகள்
**********************************
1781 - கூலிகளை ஏற்றிச்சென்ற சொங் (Zong) என்ற கப்பல் மாலுமிகள் காப்புறுதிக்காக 133 ஆபிரிக்கர்களை கொன்று கடலுக்குள் எறிந்தனர்.
1830 - போலந்தில் ரஷ்யாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.
1855 - துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.
1877 - தோமஸ் அல்வா எடிசன் போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.
1915 - கலிபோர்னியாவில் சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கிய கட்டடங்கள் தீயில் எரிந்தன.
1922 - ஹவார்ட் கார்ட்டர் பண்டைய எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின் கல்லறையை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விட்டார்.
1929 - ஐக்கிய அமெரிக்காவின் ரிச்சார்ட் பயேர்ட் தென் முனை மேல் பறந்த முதல் மனிதரானார்.
1945 - யூகொஸ்லாவிய சமஷ்டி மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1947 - பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவெடுத்தது.
1950 - வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.
1961 - நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது).
1963 - 118 பேருடன் சென்ற கனடாவின் விமானம் மொன்ட்ரியாலில் விபத்துக்குள்ளாகியது.
1982 - ஐநா பொது அவை சோவியத் படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.
1987 - கொரிய விமானம் தாய்-பர்மிய எல்லைக்கருகில் வெடித்துச் சிதறியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தியது.

பிறப்புக்கள்
1889 - எட்வின் ஹபிள், வானிலையாளர் (இ. 1953)
1908 - என். எஸ். கிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 1957)

1913 - எஸ். வி. சகஸ்ரநாமம், நாடகக் கலைஞர், திரைப்பட நடிகர் (இ. 1988)

இறப்புகள்
1989 - மருதகாசி, திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1920)
1993 - ஜே. ஆர். டி. டாடா, இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர், இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடி (பி. 1904)
2008 - ஜோர்ன் அட்சன், டென்மார்க் கட்டிடக்கலைஞர் (பி. 1918)

நவம்பர் 28 நிகழ்வுகள்

நவம்பர் 28 நிகழ்வுகள்
**********************************

1520 - தென்னமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் பசிபிக் பெருங்கடலை அடைந்தான். இவனே அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவான்.
1729 - மிசிசிப்பியில் நட்சே இந்தியர்கள் குழந்தைகள், பெண்கள் உட்பட 239 பிரெஞ்சு இனத்தவரைக் கொன்றார்கள்.
1821 - பனாமா ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது.
1843 - ஹவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகியன விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன.
1893 - நியூசிலாந்தில் முதற்தடவையாக பெண்கள் வாக்களித்தனர்.
1905 - ஐரிஷ் தேசியவாதி ஆர்தர் கிறிபித் அயர்லாந்தின் விடுதலைக்காக சின் ஃபெயின் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்.
1912 - அல்பேனியா ஒட்டோமான் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1918 - புக்கோவினா ருமேனிய இராச்சியத்துடன் இணைய முடிவு செய்ததூ.
1942 - மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 491 பேர் இறந்தார்கள்.
1943 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியையும், ஜப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் டெஹ்ரானில் சந்தித்துப் பேசினார்கள்.
1944 - இரண்டாம் உலகப் போர்: அல்பேனியா அல்பேனியப் பார்ட்டிசான்களினால் விடுவிக்கப்பட்டது.
1958 - சாட், கொங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன.
1960 - மவுரித்தேனியா பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1964 - நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
1975 - கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1979 - நியூசிலாந்து விமானம் எரெபஸ் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 257 பேரும் கொல்லப்பட்டனர்.
1987 - தென்னாபிரிக்காவின் விமானம் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த அனைத்து 159 பேரும் கொல்லப்பட்டனர்.
1989 - பனிப்போர்: செக்கொசிலவாக்கியாவின் தனியாதிக்க உரிமையை விட்டுத்தருவதாக அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
1990 - ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.
1990 - லீ குவான் யூ சிங்கப்பூர் தலைமை அமைச்சர் பதவையை விட்டு விலகினார். கோ சொக் டொங் புதிய தலைமை அமைச்சரானார்.
1991 - தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1994 - ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய நோர்வே மக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
2006 - நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.

பிறப்புக்கள்
1757 – வில்லியம் பிளேக், ஆங்கிலேயக் கவி, ஓவியர் (இ. 1827)

1820 - பிரெட்ரிக் எங்கெல்சு, ஜேர்மன் அரசியல் மெய்யியலாளர் (இ. 1895).
1864 - ஜேம்ஸ் ஆலன், ஆங்கில எழுத்தாளர் (இ. 1912)
1876 – பெர்ட் வோக்லர், தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் (இ. 1946)
1962 – யோன் சுருவாட், அமெரிக்க நடிகர்
1967 – ஆன்னா நிக்கோல் ஸ்மித், அமெரிக்க நடிகை (இ. 2007)
1984 - ஆன்டுரூ போகட், ஆஸ்திரேலிய கூடைப்பந்து ஆட்டக்காரர்
1987 – கிரேய்க் கீஸ்வெட்டர், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்
1694 – மட்சுவோ பாஷோ, யப்பானியக் கவி (பி. 1644)
1890 – ஜோதிராவ் புலே, இந்திய மெய்யியலாளர் (பி. 1827)
1939 – ஜேம்ஸ் நெய்ஸ்மித், கனடிய-அமெரிக்க கூடைப்பந்து வீரர் (பி. 1861)
1954 – என்ரிக்கோ பெர்மி, இத்தாலிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901)
1968 – எனிட் பிளைட்டன், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1897)

சிறப்பு நாள்
அல்பேனியா - விடுதலை நாள் (1912)
மவுரித்தேனியா - விடுதலை நாள் (1960)

Wednesday, November 26, 2014

நவம்பர் 27 நிகழ்வுகள்

நவம்பர் 27 நிகழ்வுகள்
**********************************
1703 - இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள கலங்கரை விளக்கம் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமாக்கப்பட்டது.
1830 - அன்னை மரியா உலக உருண்டை மேல் நின்று கொண்டு கத்தரீன் லபோரேக்குக் காட்சியளித்தார்.
1895 - ஊர்ஃபா என்ற இடத்தில் 3,000 ஆர்மேனியர்கள் ஓட்டோமான் படைகளினால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
1895 - பாரிசில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
1912 - மொரோக்கோவின் வடக்குக் கரையை எசுப்பானியா தனது ஆளுகைக்குள் அறிவித்தது.
1935 - இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது விமானம் மதராசில் இருந்து வந்திறங்கியது.
1940 - ருமேனியாவில் இரண்டாம் கரோல் மன்னனின் ஆதரவாளர்கள் 60 பேரை தளபதி இயன் அண்டோனெஸ்கு கைதுசெய்து தூக்கிலிட்டான்.
1944 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டஃபோர்ட்ஷயரில் ஆங்கிலேய விமானப்படைத் தளத்தின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
1964 - பனிப்போர்: இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டார்.
1971 - சோவியத்தின் மார்ஸ் 2 விண்கலம் தனது துணை விண்கோள் ஒன்றை செவ்வாய்க் கோளில் இறக்கியது. இது செவ்வாயின் மோதி செயலிழந்தது. செவ்வாயில் இறங்கிய முதலாவது கலம் இதுவாகும்.
1975 - கின்னசு உலக நசாதனை நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ் மாக்வேர்ட்டர் ஐரியக் குடியரசு இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1983 - கொலம்பியாவின் போயிங் 747 விமானம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் அருகே வீழ்ந்து நொருங்கியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.
1989 - ஈழப்போரில் இறந்த போராளிகளை நினைவுகூரும் முகமாக மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டது.
1999 - நியூசிலாந்தின் முதலாவது பெண் பிரதமராக தொழிற்கட்சியைச் சேர்ந்த ஹெலன் கிளார்க் தெரிவு செய்யப்பட்டார்.
2001 - ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஓசிரிசு கோளில் ஆவியாகக்கூடிய நிலையில் ஐதரசன் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.
2005 - பிரான்சின் ஏமியென்சு நகரில் உலகின் முதலாவது மனித முகமாற்றுப் பொருத்து வெற்றிகரமாக இடம்பெற்றது.
2006 - கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்' என்ற அங்கீகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது.
2007 - ஈழப்போர்: கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலியின் ஒலிபரப்பு நிலையம், நடுவப்பணியகம் ஆகியவற்றின் மீது இலங்கை வான்படையின் வானூர்திகள் வான்குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டு 10 பேர் படுகாயமடைந்தனர்.
2007 - ஈழப்போர்: இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டம், ஐயன்கேணியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 9 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
2009 - மாஸ்கோவிற்கும், சென் பீட்டர்ஸ்பேர்க்கிற்கும் இடையில் விரைவுத் தொடருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 28 பேர் கொல்லப்பட்டு, 96 பேர் காயமடைந்தனர்.

பிறப்புக்கள்
1934 - யோசப் பரராஜசிங்கம், இலங்கை, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர், (இ. 2005)
1940 - புரூஸ் லீ, தற்காப்புக்கலை நிபுணர், நடிகர் (இ. 1973)
1942 - ஜிமி ஹென்றிக்ஸ், அமெரிக்க கிட்டார் கலைஞர் (இ. 1970)
1960 - யூலியா திமொஷென்கோ, உக்ரேனிய அரசியல்வாதி, பிரதமர்
1963 - திலீபன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி, உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தவர் (இ. 1987)
1965 - பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதுநிலைத் தளபதி (இ. 2008)
1980 - மைக்கேல் யார்டி, ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர்
1986 - சுரேஷ் ரைனா, இந்தியத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்
கிமு 8 - ஓராசு, இத்தாலியக் கவிஞர் (பி. கிமு 65)
1852 - அடா லவ்லேஸ், ஆங்கிலேயக் கணிதவியலர் (பி. 1815)
1982 - லெப்டினன்ட் சங்கர், ஈழப்போராட்டத்தில் இறந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளி (பி. 1960)
2008 - வி. பி. சிங், முன்னாள் இந்தியப் பிரதமர் (பி. 1931)


சிறப்பு நாள்
தமிழ் ஈழம் - மாவீரர் நாள்
http://worldmessagee.blogspot.in/

Tuesday, November 25, 2014

நவம்பர் 26 நிகழ்வுகள்

நவம்பர் 26 நிகழ்வுகள்
**********************************
1778 - அவாயித் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியன் கப்டன் ஜேம்ஸ் குக்.
1789 - தேசிய நன்றியறிதல் நாள் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் நினைவுகூரப்பட்டது.
1842 - நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1863 - அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் நவம்பர் 26 ஐ தேசிய நன்றியறிதல் நாளாக அறிவித்து, ஆண்டுதோறும் நவம்பர் மாத கடைசி வியாழக்கிழமை கொண்டாடுமாறு பணித்தார். 1941 முதல் இது நவம்பர் மாதத்தில் நான்காவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
1922 - எகிப்திய மன்னன் துட்டன்காமுன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.
1941 - பிரான்சிடமிருந்து லெபனான் ஒருதலைப் பட்சமாக விடுதலையைப் பிரகடனப் படுத்தியது.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஆறு யப்பானிய விமானங்கள் தொலைதொடர்புகள் அற்ற நிலையில் யப்பானின் இத்தோகபு குடாவிலிருந்து பேர்ள் துறைமுகத்தை தாக்கியழிக்கப் புறப்பட்டன.
1942 - நோர்வேயைச் 572 சேர்ந்த யூதர்கள் ஜேர்மனியர்களினால் போலந்தின் ஓஸ்விட்ச் நகரில் உள்ள யூத முகாமுக்கு நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் 25 பேரே தப்பினர்.
1944 - இரண்டாம் உலகப்போர்: செருமனியின் வி-2 ஏவுகணை ஐக்கிய இராச்சியத்தில் நியூ கிராஸ் வீதியில் உள்ள வுல்வர்த் பல்பொருள் அங்காடி மேல் வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர்.
1944 - இரண்டாம் உலகப் போர்: செருமனி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகர் மீது வி-1, வி-2 ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்தது.
1949 - அம்பேத்கர் சமர்ப்பித்த இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்றுக் கொண்டது.
1950 - மக்கள் சீனக் குடியரசின் படைகள் வட கொரியாவினுள் நுழைந்து தென் கொரியா மற்றும் அமெரிக்கப் படைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.
1957 - சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.
1965 - சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது.
1970 - குவாதலூப்பேயின் பாஸ்தெர் நகரில் ஒரு நிமிடத்தில் பெய்த 1.5 அங்குல மழையே உலகில் இதுவரை பதியப்பட்ட மிகப்பெரும் மழைவீழ்ச்சி ஆகும்.
1983 - லண்டன் ஹீத்ரோ விமானநிலைய பொதிகள் பாதுகாப்பு அறையில் இருந்து £26 மில்லியன் பெறுமதியான 6,800 தங்கப் பாளங்கள் களவாடப்பட்டன.
2001 - நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்.
2002 - இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது.
2003 - கான்கோர்டு தனது கடைசிப் பயணத்தை இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரின் மீது மேற்கொண்டது.
2008 - 26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்
2013 - இலங்கையில் பயணிகள் காசோலை வழங்கும் நடைமுறை முடிவுக்கு வந்தது.

பிறப்புக்கள்
1857 - பேர்டினண்ட் டி சோசர், சுவீடன் மொழியியலாளர் (இ. 1913)
1876 - அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ், சவூதி அராபிய மன்னர் (இ. 1953)
1921 - வர்கீஸ் குரியன், இந்திய பொறியாளர், தொழிலதிபர் (இ. 2012)
1936 - லலித் அத்துலத்முதலி, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் (இ. 1993)
1939 - அப்துல்லா அகமது படாவி, மலேசியப் பிரதமர்
1948 - எலிசபெத் பிளாக்பர்ன், நோபல் பரிசு பெற்றவர்
1948 - வி. கே. பஞ்சமூர்த்தி, ஈழத்தின் நாதசுவரக் கலைஞர்
1954 - வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் (இ.2009)

1972 - அர்ஜூன் ராம்பால், இந்திய நடிகர்
1983 - கிரிச் ஹக்ஸ், ஃபேஸ்புக்கை கண்டுபிடித்தவர்

இறப்புகள்
399 - சிரீசியஸ் (திருத்தந்தை) (பி. 334)
1504 - முதலாம் இசபெல்லா (பி. 1451)
1883 - சோஜோர்னர் ட்ரூத், அமெரிக்க செயற்திறனாளர் (பி. 1797)
2006 - ஜி. வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை

Monday, November 24, 2014

நவம்பர் 25 நிகழ்வுகள்

நவம்பர் 25 நிகழ்வுகள்
++++++++++++++++++++

1120 - இங்கிலாந்து மன்னன் முதலாம் ஹென்றியின் மகன் வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் கொல்லப்பட்டான்.
1542 - ஆங்கிலேயப் படைகள் சொல்வே மொஸ் என்ற இடத்தில் ஸ்கொட்லாந்துப் படைகளைத் தோற்கடித்தன.
1667 - கவ்காசியாப் பகுதியில் ஷெமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80,000 பேர் கொல்லப்பட்டனர்.
1703 - பிரித்தானியாவில் மிகப் பெரும் சூறாவளி பதியப்பட்டது. 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
1758 - பிரித்தானியப் படைகள் பிரெஞ்சு வசமிருந்த Fort Duquesne (பென்சில்வேனியா) ஐக் கைப்பற்றினர்.
1783 - கடைசி பிரித்தானியப் படைகள் நியூயோர்க் நகரை விட்டுப் புறப்பட்டன.
1795 - சுதந்திரப் போலந்தின் கடைசி மன்னன் ஸ்டனிஸ்லாஸ் ஆகஸ்ட் பொனியாட்டோவ்ஸ்கி பதவியில் இருந்து அகற்றப்பட்டு ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
1833 - சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம் ஏற்பட்டது.
1839 - இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1867 - அல்பிரட் நோபல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார்.
1905 - டென்மார்க் இளவரசன் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தான். இவன் பின்னர் "ஏழாம் ஹாக்கோன்" என்ற பெயரில் நோர்வேயின் மன்னனானான்.
1926 - ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 76 பேர் கொல்லப்பட்டு பலர் காயமுற்றனர்.
1936 - ஜப்பான், ஜேர்மனி ஆகியன சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள பேர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.
1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம், டெப்ட்ஃபோர்ட் நகரில் வூல்வேர்த் கடைத்தொகுதியில் ஜேர்மனிய விமானங்கள் ஏவுகணை வீசியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
1950 - ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் ஏற்பட்ட சூறாவளியினால் மேற்கு வேர்ஜீனியாவில் 323 பேர் கொல்லப்பட்டனர்.
1950 - மக்கள் சீனக் குடியரசு ஐநா படைகளை எதிர்க்க கொரியப் போரில் ஈடுபட்டது.
1952 - அகதா கிறிஸ்டியின் மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap) திரைப்படமாக வெளிவந்தது.
1960 – டொமினிக்கன் குடியரசில் மிராபெல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1973 - கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொஸ் இராணுவப் புரட்சி ஒன்றில் பதவி இழந்தார்.
1975 - சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1981 - ரொடீசியாவிலிருந்து மும்பாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் செலுத்தப்பட்டது.
1987 - பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் கொல்லப்பட்டனர்.
1992 - செக்கொசிலவாக்கியாவின் நாடாளுமன்றம் நாட்டை செக் குடியரசு, சிலவாக்கியா என இரண்டாக ஜனவரி 1, 1993 இலிருந்து பிரிக்க முடிவெடுத்தது.
2000 - அசர்பைஜான் தலைநகர் பக்கு நகரில் இடம்பெற்ற 7.0 அளவை நிலநடுக்கத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - சீனாவின் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்
1844 - கார்ல் பென்ஸ் ஜெர்மானிய வாகனப்பொறியாளர் (இ. 1929)

1952 - இம்ரான் கான், பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்

இறப்புகள்
1964 - துவாரம் வேங்கடசுவாமி நாயுடு கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் (பி: 1893)

1974 - ஊ தாண்ட், பர்மியர், முன்னாள் ஐநா செயலாளர் (பி. 1909)
1979 - பெல்ஜியத் தமிழறிஞர் டெசி (பி. 1898)

சிறப்பு நாள்
பொஸ்னியா ஹெர்செகோவினா - தேசிய நாள் (1943)
சுரிநாம் - விடுதலை நாள் (1975)
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள்

Sunday, November 23, 2014

நவம்பர் 24 நிகழ்வுகள்

நவம்பர் 24 நிகழ்வுகள்
++++++++++++++++++++

1639 - ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
1642 - ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாஸ்மானியா எனப் பெயர் பெற்றது.
1859 - சார்ல்ஸ் டார்வின் உயிரங்களின் தோற்றம் நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின.
1914 - முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
1917 - விஸ்கொன்சின் மாநிலத் தலைநகர் மில்வாக்கியில் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
1922 - துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஐரியக் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ரொபேர்ட் ஏர்ஸ்கின் சைல்டேர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1926 - பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் பொறுப்பை அன்னையிடம் ஒப்படைத்து விட்டு அரவிந்தர் இளைப்பாறினார்.
1940 - இரண்டாம் உலகப் போர்: சிலோவாக்கியா அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தது.
1943 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கக் கடற்படைக் கப்பல் டராவா என்ற இடத்தில் மூழ்கடிக்கப்பட்டதில் 650 பேர் கொல்லப்பட்டனர்.
1944 - இரண்டாம் உலகப் போர்: டோக்கியோ நகர் மீது முதற்தடவையாக அமெரிக்க விமானங்கள் குண்டுகளைப் போட்டன.
1965 - ஜோசப் மொபுட்டு கொங்கோவின் குடியரசுத் தலைவர் பதவியை இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் கைப்பற்றினார். இவர் 1971 இல் கொங்கோவின் பெயரை சாயீர் என மாற்றினார். 30 ஆண்டுகளின் பின் 1997 இல் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1966 - சிலோவாக்கியாவில் பல்கேரிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 82 பேர் கொல்லப்பட்டனர்.
1969 - சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
1971 - வாஷிங்டனில் பெரும் சூறாவளி நாளன்று கடத்தப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து டான் கூப்பர் என்பவன் 200,000 அமெரிக்க டாலர்களுடன் பாரசூட்டுடன் கீழே குதித்தான். இவனோ பணமோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
1992 - மக்கள் சீனக் குடியரசில் சீன விமானம் ஒன்று வீழ்ந்ததில் 141 பேர் கொல்லப்பட்டனர்.
1992 - யாழ்ப்பாணம், பலாலி வான்படைத் தளத்தின் கிழக்குப் பகுதி இராணுவ வேலி விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
2002 - ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் டில்லியில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
2006 - சிங்கள நாளிதழான `மௌபிம' பத்திரிகையின் தமிழ்ப் பத்திரிகையாளரான முனுசாமி பரமேஸ்வரி, பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

பிறப்புக்கள்
1938 - ஆஸ்கர் ராபர்ட்சன், அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்
1961 - அருந்ததி ராய், இந்தியப் பெண் எழுத்தாளர்

இறப்புகள்
2012 வி. என். சிதம்பரம் திரைப்பட தயாரிப்பாளர், கமலா திரையரங்க உரிமையாளர்.

சிறப்பு நாள்
கொங்கோ மக்களாட்சிக் குடியரசு - தேசிய நாள்
படிவளர்ச்சி நாள்