Tuesday, September 30, 2014

அக்டோபர் 1 நிகழ்வுகள்

அக்டோபர் 1 நிகழ்வுகள்*

***********************************

கிமு 331 - மகா அலெக்சாண்டர் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனை போரில் வென்றான்.
959 - முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1787 - "சுவோரொவ்" தலைமையில் ரஷ்யர்கள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தனர்.
1788 - நியூவென் ஹியூ வியட்நாமின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.
1795 - பிரான்ஸ் பெல்ஜியத்தைப் பிடித்தது.
1799 - புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டான்.
1800 - ஸ்பெயின் லூசியானாவை பிரான்சிடம் தந்தது.
1814 - நெப்போலியனின் தோல்வியை அடுத்து ஐரோப்பாவின் புதிய அரசியல் வரைபடத்தை வரைவதற்காக வியென்னா காங்கிரஸ்கூடியது.
1827 - இவான் பஸ்க்கேவிச் தலைமையில் ரஷ்ய இராணுவம் ஆர்மேனியாவின் தலைநகர் யெரெவானைப் பிடித்தது.
1843 - நியூஸ் ஒஃப் தெ வேர்ல்ட் பத்திரிகை லண்டனில் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.
1854 - இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
1869 - உலகின் முதல் தபால் அட்டை ஆஸ்திரியாவில் வெளியிடப்பட்டது.
1880 - இந்தியாவுடனான காசுக்கட்டளை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1880 - முதலாவது மின் விளக்கு தொழிற்சாலையை தொமஸ் எடிசன் ஆரம்பித்தார்.
1887 - பிரித்தானியரினால் பலூசிஸ்தான் கைப்பற்றப்பட்டது.
1892 - இலங்கையில் இந்திய இரண்டு அணா நாணயம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது. பதிலாக வெள்ளி நாணயம் அறிமுகமானது.
1895 - பிரெஞ்சுப் படைகள் மடகஸ்காரின் அண்டனனாரிவோ நகரைக் கைப்பற்றினர்.
1898 - ரஷ்யாவின் முக்கிய நகரங்களிலிருந்து யூதர்கள் இரண்டாம் நிக்கலாஸ் மன்னனால் வெளியேற்றப்பட்டனர்.
1910 - லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் கட்டடம் பெரும் குண்டுவெடிப்பினால் தகர்க்கப்பட்டது. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
1918 - முதலாம் உலகப் போர்: அரபுப் படைகள் சிரியாவின் டமாஸ்கஸ் நகரைக் கைப்பற்றினர்.
1931 - ஜோர்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது.
1943 - இரண்டாம் உலகப் போர்: நேப்பில்ஸ் கூட்டுப் படைகளிடம் வீழ்ந்தது.
1949 - மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு அறிவிக்கப்பட்டது.
1953 - ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டது.
1960 - சைப்பிரஸ், மற்றும் நைஜீரியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றன.
1961 - கிழக்கு மற்றும் மேற்கு கமரூன் ஒன்றுபட்டு கமரூன் சமஷ்டிக் குடியரசு ஆகியது.
1965 - இந்தோனேசியாவில் நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சி ஜெனரல் சுகார்ட்டோவினால் முறியடிக்கப்பட்டது.
1969 - கொன்கோர்ட் விமானம் முதற்தடவையாக ஒலியின் வேகத்தை மீறியது.
1971 - வால்ட் டிஸ்னி உலகம் புளோரிடாவில் அமைக்கப்பட்டது.
1975 - சிஷெல்ஸ் சுயாட்சியைப் பெற்றது. எலீஸ் தீவுகள் கில்பேர்ட் தீவுகளிலிருந்து பிரிக்கப்பட்டு துவாலு என்ற பெயரைப் பெற்றது.
1977 - பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பெலே இளைப்பாறினார்.
1978 - துவாலு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1979 - ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயை பனாமாவுக்கு மீள் அளித்தது.
1982 - சொனி நிறுவனம் முதலாவது குறுந்தட்டு ஒலிபரப்பு சாதனத்தை (CDP-101) வெளியிட்டது.
1992 - விடுதலைப் புலிகள் கட்டைக்காடு இராணுவக் காவலரணைத் தாக்கி பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
1994 - பலாவு ஐநாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
2001 - ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையைத் தகர்க்க தற்கொலைப் படையினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
2005 - பாலியில் நடந்த குண்டுவெடிப்பில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.

பிறப்புக்கள்
1847 - அன்னி பெசண்ட், பெண் விடுதலைக்குப் போராடியவர் (இ. 1933)
1924 - ஜிம்மி கார்ட்டர், அமெரிக்காவின் 39வது குடியரசுத் தலைவர்
1927 - சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2001)
1928 - ஜூ ரோங்ஜி, சீனத் தலைவர்
1932 - அரங்க முருகையன், தமிழறிஞர், எழுத்தாளர் (இ 2009)
1936 - கே. எஸ். சிவகுமாரன், ஈழத்து எழுத்தாளர், திறனாய்வாளர்
1947 - ஆரன் சீசேனோவர், நோபல் பரிசு பெற்ற இசுரேலியர்

இறப்புகள்
2008 - பூர்ணம் விஸ்வநாதன், தமிழக நாடக, திரைப்பட நடிகர்

சிறப்பு நாள்
மக்கள் சீனக் குடியரசு - தேசிய நாள் (1949)
சைப்பிரஸ் - விடுதலை நாள் (1960)
நைஜீரியா - விடுதலை நாள் (1960)
துவாலு - விடுதலை நாள் (1978)
சிங்கப்பூர் - சிறுவர் நாள்
ஆர்மேனியா - ஆசிரியர் நாள்
அனைத்துலக முதியோர் நாள்
அக்டோபர் 1-7 உலக வனவுயிரி வாரம்