Friday, November 28, 2014

நவம்பர் 30 நிகழ்வுகள்



நவம்பர் 30 நிகழ்வுகள்
**********************************


1612 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படைகளுக்கும் போர்த்துக்கீசருக்கும் இடையில் இந்தியக் கரையில் சுவாலி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரித்தானியர் வென்றனர்.
1700 - சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் ரஷ்யப் படைகளை வென்றனர்.
1718 - நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்ல்ஸ் இறந்தான்.
1782 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் இரண்டுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது.
1803 - ஸ்பானியர்கள் லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரபூர்வமாகக் கையளித்தனர். பிரான்ஸ் இப்பிரதேசத்தை 20 நாட்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்றது.
1806 - நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றினர்.
1853 - ரஷ்யப் பேரரசின் கடற்படை வட துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் ஓட்டோமான் பேரரசின் படைகளைத் தோற்கடித்தன.
1872 - உலகின் முதலாவது அனைத்துலக காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது.
1908 - பென்சில்வேனியாவில் மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 154 பேர் கொல்லப்பட்டனர்.
1917 - முதலாம் உலகப் போர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் போரில் ஈடுபட்டு இறந்தார்.
1936 - லண்டனில் பளிங்கு அரண்மனை தீயினால் சேதமடைந்தது.
1939 - சோவியத் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டு குண்டுகளை வீசீன.
1943 - இரண்டாம் உலகப் போர்: டெஹ்ரானில் கூடிய அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் ஜூன் 1944 இல் ஐரோப்பாவைத் தாக்கும் தமது திட்டத்தை ஆராய்ந்தனர்.
1962 - பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட் ஐக்கிய நாடுகள் சபையின் 3வது பொதுச் செயலராகத் தெரிவானார்.
1966 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பார்போடஸ் விடுதலை பெற்றது.
1967 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை பெற்றது.
1967 - சுல்பிகார் அலி பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.
1981 - பனிப்போர்: ஜெனீவாவில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் பிரதிநிதிகள் ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள நடுத்தர ஏவுகணைகளைக் குறைக்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.
1995 - வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.

பிறப்புகள்
1825 - வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, பிரெஞ்சு ஓவியர் (இ. 1905)


1835 - மார்க் டுவெய்ன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1910)
1857 - பொபி எபில், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (இ. 1936)
1858 - ஜகதீஷ் சந்திர போஸ், இந்திய முதல் விண்ணலை அறிவியலாளர் (இ. 1937)
1869 - நில்சு குஸ்டாப் டேலன், சுவீடிய இயற்பியலாளர், பநோபல் பரிசு பெற்றவர் (இ. 1937)
1874 - வின்ஸ்டன் சர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரும், நோபல் பரிசு பெற்றவரும் (இ. 1965)
1950 - வாணி ஜெயராம், இந்தியப் பாடகி
1965 - பென் ஸ்டில்லர், அமெரிக்க நடிகர்
1982 - எலிஷா கத்பெர்ட், கனடிய நடிகை
1988 - பிலிப் ஹியூஸ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (இ. 12014)
1990 - மாக்னசு கார்ல்சன், நோர்வே சதுரங்க ஆட்டக்காரர், உலக வாகையாளர்

இறப்புகள்
1900 - ஆஸ்கார் வைல்டு, ஐரிய நாடகாசிரியர், எழுத்தாளர் (பி. 1854)
1930 - பொன்னம்பலம் இராமநாதன், இலங்கைத் தமிழ்த் தலைவர், அரசியல்வாதி (பி. 1851)
2012 - ஐ. கே. குஜரால், இந்தியாவின் 15வது பிரதமர் (பி. 1919)
2012 - முனீர் மலிக், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1931)

சிறப்பு நாள்
பார்போடஸ் - விடுதலை நாள் (1966)
புனித அந்திரேயா விழா - கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையார்களால் கொண்டாடப்படுகிறது.
புனித அந்திரேயா தினம் - இசுக்காட்லாந்து நாட்டில் தேசிய தினமாகவும், வங்கி விடுமுறை தினமாகவும் ஊள்ளது.

நவம்பர் 29 நிகழ்வுகள்

நவம்பர் 29 நிகழ்வுகள்
**********************************
1781 - கூலிகளை ஏற்றிச்சென்ற சொங் (Zong) என்ற கப்பல் மாலுமிகள் காப்புறுதிக்காக 133 ஆபிரிக்கர்களை கொன்று கடலுக்குள் எறிந்தனர்.
1830 - போலந்தில் ரஷ்யாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.
1855 - துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.
1877 - தோமஸ் அல்வா எடிசன் போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.
1915 - கலிபோர்னியாவில் சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கிய கட்டடங்கள் தீயில் எரிந்தன.
1922 - ஹவார்ட் கார்ட்டர் பண்டைய எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின் கல்லறையை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விட்டார்.
1929 - ஐக்கிய அமெரிக்காவின் ரிச்சார்ட் பயேர்ட் தென் முனை மேல் பறந்த முதல் மனிதரானார்.
1945 - யூகொஸ்லாவிய சமஷ்டி மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1947 - பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவெடுத்தது.
1950 - வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.
1961 - நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது).
1963 - 118 பேருடன் சென்ற கனடாவின் விமானம் மொன்ட்ரியாலில் விபத்துக்குள்ளாகியது.
1982 - ஐநா பொது அவை சோவியத் படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.
1987 - கொரிய விமானம் தாய்-பர்மிய எல்லைக்கருகில் வெடித்துச் சிதறியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தியது.

பிறப்புக்கள்
1889 - எட்வின் ஹபிள், வானிலையாளர் (இ. 1953)
1908 - என். எஸ். கிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 1957)

1913 - எஸ். வி. சகஸ்ரநாமம், நாடகக் கலைஞர், திரைப்பட நடிகர் (இ. 1988)

இறப்புகள்
1989 - மருதகாசி, திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1920)
1993 - ஜே. ஆர். டி. டாடா, இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர், இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடி (பி. 1904)
2008 - ஜோர்ன் அட்சன், டென்மார்க் கட்டிடக்கலைஞர் (பி. 1918)

நவம்பர் 28 நிகழ்வுகள்

நவம்பர் 28 நிகழ்வுகள்
**********************************

1520 - தென்னமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் பசிபிக் பெருங்கடலை அடைந்தான். இவனே அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவான்.
1729 - மிசிசிப்பியில் நட்சே இந்தியர்கள் குழந்தைகள், பெண்கள் உட்பட 239 பிரெஞ்சு இனத்தவரைக் கொன்றார்கள்.
1821 - பனாமா ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது.
1843 - ஹவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகியன விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன.
1893 - நியூசிலாந்தில் முதற்தடவையாக பெண்கள் வாக்களித்தனர்.
1905 - ஐரிஷ் தேசியவாதி ஆர்தர் கிறிபித் அயர்லாந்தின் விடுதலைக்காக சின் ஃபெயின் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்.
1912 - அல்பேனியா ஒட்டோமான் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1918 - புக்கோவினா ருமேனிய இராச்சியத்துடன் இணைய முடிவு செய்ததூ.
1942 - மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 491 பேர் இறந்தார்கள்.
1943 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியையும், ஜப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் டெஹ்ரானில் சந்தித்துப் பேசினார்கள்.
1944 - இரண்டாம் உலகப் போர்: அல்பேனியா அல்பேனியப் பார்ட்டிசான்களினால் விடுவிக்கப்பட்டது.
1958 - சாட், கொங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன.
1960 - மவுரித்தேனியா பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1964 - நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
1975 - கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1979 - நியூசிலாந்து விமானம் எரெபஸ் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 257 பேரும் கொல்லப்பட்டனர்.
1987 - தென்னாபிரிக்காவின் விமானம் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த அனைத்து 159 பேரும் கொல்லப்பட்டனர்.
1989 - பனிப்போர்: செக்கொசிலவாக்கியாவின் தனியாதிக்க உரிமையை விட்டுத்தருவதாக அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
1990 - ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.
1990 - லீ குவான் யூ சிங்கப்பூர் தலைமை அமைச்சர் பதவையை விட்டு விலகினார். கோ சொக் டொங் புதிய தலைமை அமைச்சரானார்.
1991 - தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1994 - ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய நோர்வே மக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
2006 - நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.

பிறப்புக்கள்
1757 – வில்லியம் பிளேக், ஆங்கிலேயக் கவி, ஓவியர் (இ. 1827)

1820 - பிரெட்ரிக் எங்கெல்சு, ஜேர்மன் அரசியல் மெய்யியலாளர் (இ. 1895).
1864 - ஜேம்ஸ் ஆலன், ஆங்கில எழுத்தாளர் (இ. 1912)
1876 – பெர்ட் வோக்லர், தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் (இ. 1946)
1962 – யோன் சுருவாட், அமெரிக்க நடிகர்
1967 – ஆன்னா நிக்கோல் ஸ்மித், அமெரிக்க நடிகை (இ. 2007)
1984 - ஆன்டுரூ போகட், ஆஸ்திரேலிய கூடைப்பந்து ஆட்டக்காரர்
1987 – கிரேய்க் கீஸ்வெட்டர், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்
1694 – மட்சுவோ பாஷோ, யப்பானியக் கவி (பி. 1644)
1890 – ஜோதிராவ் புலே, இந்திய மெய்யியலாளர் (பி. 1827)
1939 – ஜேம்ஸ் நெய்ஸ்மித், கனடிய-அமெரிக்க கூடைப்பந்து வீரர் (பி. 1861)
1954 – என்ரிக்கோ பெர்மி, இத்தாலிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901)
1968 – எனிட் பிளைட்டன், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1897)

சிறப்பு நாள்
அல்பேனியா - விடுதலை நாள் (1912)
மவுரித்தேனியா - விடுதலை நாள் (1960)

Wednesday, November 26, 2014

நவம்பர் 27 நிகழ்வுகள்

நவம்பர் 27 நிகழ்வுகள்
**********************************
1703 - இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள கலங்கரை விளக்கம் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமாக்கப்பட்டது.
1830 - அன்னை மரியா உலக உருண்டை மேல் நின்று கொண்டு கத்தரீன் லபோரேக்குக் காட்சியளித்தார்.
1895 - ஊர்ஃபா என்ற இடத்தில் 3,000 ஆர்மேனியர்கள் ஓட்டோமான் படைகளினால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
1895 - பாரிசில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
1912 - மொரோக்கோவின் வடக்குக் கரையை எசுப்பானியா தனது ஆளுகைக்குள் அறிவித்தது.
1935 - இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது விமானம் மதராசில் இருந்து வந்திறங்கியது.
1940 - ருமேனியாவில் இரண்டாம் கரோல் மன்னனின் ஆதரவாளர்கள் 60 பேரை தளபதி இயன் அண்டோனெஸ்கு கைதுசெய்து தூக்கிலிட்டான்.
1944 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டஃபோர்ட்ஷயரில் ஆங்கிலேய விமானப்படைத் தளத்தின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
1964 - பனிப்போர்: இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டார்.
1971 - சோவியத்தின் மார்ஸ் 2 விண்கலம் தனது துணை விண்கோள் ஒன்றை செவ்வாய்க் கோளில் இறக்கியது. இது செவ்வாயின் மோதி செயலிழந்தது. செவ்வாயில் இறங்கிய முதலாவது கலம் இதுவாகும்.
1975 - கின்னசு உலக நசாதனை நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ் மாக்வேர்ட்டர் ஐரியக் குடியரசு இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1983 - கொலம்பியாவின் போயிங் 747 விமானம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் அருகே வீழ்ந்து நொருங்கியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.
1989 - ஈழப்போரில் இறந்த போராளிகளை நினைவுகூரும் முகமாக மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டது.
1999 - நியூசிலாந்தின் முதலாவது பெண் பிரதமராக தொழிற்கட்சியைச் சேர்ந்த ஹெலன் கிளார்க் தெரிவு செய்யப்பட்டார்.
2001 - ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஓசிரிசு கோளில் ஆவியாகக்கூடிய நிலையில் ஐதரசன் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.
2005 - பிரான்சின் ஏமியென்சு நகரில் உலகின் முதலாவது மனித முகமாற்றுப் பொருத்து வெற்றிகரமாக இடம்பெற்றது.
2006 - கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்' என்ற அங்கீகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது.
2007 - ஈழப்போர்: கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலியின் ஒலிபரப்பு நிலையம், நடுவப்பணியகம் ஆகியவற்றின் மீது இலங்கை வான்படையின் வானூர்திகள் வான்குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டு 10 பேர் படுகாயமடைந்தனர்.
2007 - ஈழப்போர்: இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டம், ஐயன்கேணியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 9 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
2009 - மாஸ்கோவிற்கும், சென் பீட்டர்ஸ்பேர்க்கிற்கும் இடையில் விரைவுத் தொடருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 28 பேர் கொல்லப்பட்டு, 96 பேர் காயமடைந்தனர்.

பிறப்புக்கள்
1934 - யோசப் பரராஜசிங்கம், இலங்கை, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர், (இ. 2005)
1940 - புரூஸ் லீ, தற்காப்புக்கலை நிபுணர், நடிகர் (இ. 1973)
1942 - ஜிமி ஹென்றிக்ஸ், அமெரிக்க கிட்டார் கலைஞர் (இ. 1970)
1960 - யூலியா திமொஷென்கோ, உக்ரேனிய அரசியல்வாதி, பிரதமர்
1963 - திலீபன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி, உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தவர் (இ. 1987)
1965 - பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதுநிலைத் தளபதி (இ. 2008)
1980 - மைக்கேல் யார்டி, ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர்
1986 - சுரேஷ் ரைனா, இந்தியத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்
கிமு 8 - ஓராசு, இத்தாலியக் கவிஞர் (பி. கிமு 65)
1852 - அடா லவ்லேஸ், ஆங்கிலேயக் கணிதவியலர் (பி. 1815)
1982 - லெப்டினன்ட் சங்கர், ஈழப்போராட்டத்தில் இறந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளி (பி. 1960)
2008 - வி. பி. சிங், முன்னாள் இந்தியப் பிரதமர் (பி. 1931)


சிறப்பு நாள்
தமிழ் ஈழம் - மாவீரர் நாள்
http://worldmessagee.blogspot.in/

Tuesday, November 25, 2014

நவம்பர் 26 நிகழ்வுகள்

நவம்பர் 26 நிகழ்வுகள்
**********************************
1778 - அவாயித் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியன் கப்டன் ஜேம்ஸ் குக்.
1789 - தேசிய நன்றியறிதல் நாள் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் நினைவுகூரப்பட்டது.
1842 - நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1863 - அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் நவம்பர் 26 ஐ தேசிய நன்றியறிதல் நாளாக அறிவித்து, ஆண்டுதோறும் நவம்பர் மாத கடைசி வியாழக்கிழமை கொண்டாடுமாறு பணித்தார். 1941 முதல் இது நவம்பர் மாதத்தில் நான்காவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
1922 - எகிப்திய மன்னன் துட்டன்காமுன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.
1941 - பிரான்சிடமிருந்து லெபனான் ஒருதலைப் பட்சமாக விடுதலையைப் பிரகடனப் படுத்தியது.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஆறு யப்பானிய விமானங்கள் தொலைதொடர்புகள் அற்ற நிலையில் யப்பானின் இத்தோகபு குடாவிலிருந்து பேர்ள் துறைமுகத்தை தாக்கியழிக்கப் புறப்பட்டன.
1942 - நோர்வேயைச் 572 சேர்ந்த யூதர்கள் ஜேர்மனியர்களினால் போலந்தின் ஓஸ்விட்ச் நகரில் உள்ள யூத முகாமுக்கு நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் 25 பேரே தப்பினர்.
1944 - இரண்டாம் உலகப்போர்: செருமனியின் வி-2 ஏவுகணை ஐக்கிய இராச்சியத்தில் நியூ கிராஸ் வீதியில் உள்ள வுல்வர்த் பல்பொருள் அங்காடி மேல் வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர்.
1944 - இரண்டாம் உலகப் போர்: செருமனி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகர் மீது வி-1, வி-2 ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்தது.
1949 - அம்பேத்கர் சமர்ப்பித்த இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்றுக் கொண்டது.
1950 - மக்கள் சீனக் குடியரசின் படைகள் வட கொரியாவினுள் நுழைந்து தென் கொரியா மற்றும் அமெரிக்கப் படைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.
1957 - சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.
1965 - சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது.
1970 - குவாதலூப்பேயின் பாஸ்தெர் நகரில் ஒரு நிமிடத்தில் பெய்த 1.5 அங்குல மழையே உலகில் இதுவரை பதியப்பட்ட மிகப்பெரும் மழைவீழ்ச்சி ஆகும்.
1983 - லண்டன் ஹீத்ரோ விமானநிலைய பொதிகள் பாதுகாப்பு அறையில் இருந்து £26 மில்லியன் பெறுமதியான 6,800 தங்கப் பாளங்கள் களவாடப்பட்டன.
2001 - நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்.
2002 - இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது.
2003 - கான்கோர்டு தனது கடைசிப் பயணத்தை இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரின் மீது மேற்கொண்டது.
2008 - 26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்
2013 - இலங்கையில் பயணிகள் காசோலை வழங்கும் நடைமுறை முடிவுக்கு வந்தது.

பிறப்புக்கள்
1857 - பேர்டினண்ட் டி சோசர், சுவீடன் மொழியியலாளர் (இ. 1913)
1876 - அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ், சவூதி அராபிய மன்னர் (இ. 1953)
1921 - வர்கீஸ் குரியன், இந்திய பொறியாளர், தொழிலதிபர் (இ. 2012)
1936 - லலித் அத்துலத்முதலி, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் (இ. 1993)
1939 - அப்துல்லா அகமது படாவி, மலேசியப் பிரதமர்
1948 - எலிசபெத் பிளாக்பர்ன், நோபல் பரிசு பெற்றவர்
1948 - வி. கே. பஞ்சமூர்த்தி, ஈழத்தின் நாதசுவரக் கலைஞர்
1954 - வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் (இ.2009)

1972 - அர்ஜூன் ராம்பால், இந்திய நடிகர்
1983 - கிரிச் ஹக்ஸ், ஃபேஸ்புக்கை கண்டுபிடித்தவர்

இறப்புகள்
399 - சிரீசியஸ் (திருத்தந்தை) (பி. 334)
1504 - முதலாம் இசபெல்லா (பி. 1451)
1883 - சோஜோர்னர் ட்ரூத், அமெரிக்க செயற்திறனாளர் (பி. 1797)
2006 - ஜி. வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை

Monday, November 24, 2014

நவம்பர் 25 நிகழ்வுகள்

நவம்பர் 25 நிகழ்வுகள்
++++++++++++++++++++

1120 - இங்கிலாந்து மன்னன் முதலாம் ஹென்றியின் மகன் வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் கொல்லப்பட்டான்.
1542 - ஆங்கிலேயப் படைகள் சொல்வே மொஸ் என்ற இடத்தில் ஸ்கொட்லாந்துப் படைகளைத் தோற்கடித்தன.
1667 - கவ்காசியாப் பகுதியில் ஷெமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80,000 பேர் கொல்லப்பட்டனர்.
1703 - பிரித்தானியாவில் மிகப் பெரும் சூறாவளி பதியப்பட்டது. 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
1758 - பிரித்தானியப் படைகள் பிரெஞ்சு வசமிருந்த Fort Duquesne (பென்சில்வேனியா) ஐக் கைப்பற்றினர்.
1783 - கடைசி பிரித்தானியப் படைகள் நியூயோர்க் நகரை விட்டுப் புறப்பட்டன.
1795 - சுதந்திரப் போலந்தின் கடைசி மன்னன் ஸ்டனிஸ்லாஸ் ஆகஸ்ட் பொனியாட்டோவ்ஸ்கி பதவியில் இருந்து அகற்றப்பட்டு ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
1833 - சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம் ஏற்பட்டது.
1839 - இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1867 - அல்பிரட் நோபல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார்.
1905 - டென்மார்க் இளவரசன் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தான். இவன் பின்னர் "ஏழாம் ஹாக்கோன்" என்ற பெயரில் நோர்வேயின் மன்னனானான்.
1926 - ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 76 பேர் கொல்லப்பட்டு பலர் காயமுற்றனர்.
1936 - ஜப்பான், ஜேர்மனி ஆகியன சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள பேர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.
1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம், டெப்ட்ஃபோர்ட் நகரில் வூல்வேர்த் கடைத்தொகுதியில் ஜேர்மனிய விமானங்கள் ஏவுகணை வீசியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
1950 - ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் ஏற்பட்ட சூறாவளியினால் மேற்கு வேர்ஜீனியாவில் 323 பேர் கொல்லப்பட்டனர்.
1950 - மக்கள் சீனக் குடியரசு ஐநா படைகளை எதிர்க்க கொரியப் போரில் ஈடுபட்டது.
1952 - அகதா கிறிஸ்டியின் மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap) திரைப்படமாக வெளிவந்தது.
1960 – டொமினிக்கன் குடியரசில் மிராபெல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1973 - கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொஸ் இராணுவப் புரட்சி ஒன்றில் பதவி இழந்தார்.
1975 - சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1981 - ரொடீசியாவிலிருந்து மும்பாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் செலுத்தப்பட்டது.
1987 - பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் கொல்லப்பட்டனர்.
1992 - செக்கொசிலவாக்கியாவின் நாடாளுமன்றம் நாட்டை செக் குடியரசு, சிலவாக்கியா என இரண்டாக ஜனவரி 1, 1993 இலிருந்து பிரிக்க முடிவெடுத்தது.
2000 - அசர்பைஜான் தலைநகர் பக்கு நகரில் இடம்பெற்ற 7.0 அளவை நிலநடுக்கத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
2006 - சீனாவின் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்
1844 - கார்ல் பென்ஸ் ஜெர்மானிய வாகனப்பொறியாளர் (இ. 1929)

1952 - இம்ரான் கான், பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்

இறப்புகள்
1964 - துவாரம் வேங்கடசுவாமி நாயுடு கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் (பி: 1893)

1974 - ஊ தாண்ட், பர்மியர், முன்னாள் ஐநா செயலாளர் (பி. 1909)
1979 - பெல்ஜியத் தமிழறிஞர் டெசி (பி. 1898)

சிறப்பு நாள்
பொஸ்னியா ஹெர்செகோவினா - தேசிய நாள் (1943)
சுரிநாம் - விடுதலை நாள் (1975)
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள்

Sunday, November 23, 2014

நவம்பர் 24 நிகழ்வுகள்

நவம்பர் 24 நிகழ்வுகள்
++++++++++++++++++++

1639 - ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
1642 - ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாஸ்மானியா எனப் பெயர் பெற்றது.
1859 - சார்ல்ஸ் டார்வின் உயிரங்களின் தோற்றம் நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின.
1914 - முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
1917 - விஸ்கொன்சின் மாநிலத் தலைநகர் மில்வாக்கியில் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
1922 - துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஐரியக் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ரொபேர்ட் ஏர்ஸ்கின் சைல்டேர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1926 - பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் பொறுப்பை அன்னையிடம் ஒப்படைத்து விட்டு அரவிந்தர் இளைப்பாறினார்.
1940 - இரண்டாம் உலகப் போர்: சிலோவாக்கியா அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தது.
1943 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கக் கடற்படைக் கப்பல் டராவா என்ற இடத்தில் மூழ்கடிக்கப்பட்டதில் 650 பேர் கொல்லப்பட்டனர்.
1944 - இரண்டாம் உலகப் போர்: டோக்கியோ நகர் மீது முதற்தடவையாக அமெரிக்க விமானங்கள் குண்டுகளைப் போட்டன.
1965 - ஜோசப் மொபுட்டு கொங்கோவின் குடியரசுத் தலைவர் பதவியை இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் கைப்பற்றினார். இவர் 1971 இல் கொங்கோவின் பெயரை சாயீர் என மாற்றினார். 30 ஆண்டுகளின் பின் 1997 இல் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1966 - சிலோவாக்கியாவில் பல்கேரிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 82 பேர் கொல்லப்பட்டனர்.
1969 - சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
1971 - வாஷிங்டனில் பெரும் சூறாவளி நாளன்று கடத்தப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து டான் கூப்பர் என்பவன் 200,000 அமெரிக்க டாலர்களுடன் பாரசூட்டுடன் கீழே குதித்தான். இவனோ பணமோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
1992 - மக்கள் சீனக் குடியரசில் சீன விமானம் ஒன்று வீழ்ந்ததில் 141 பேர் கொல்லப்பட்டனர்.
1992 - யாழ்ப்பாணம், பலாலி வான்படைத் தளத்தின் கிழக்குப் பகுதி இராணுவ வேலி விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
2002 - ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் டில்லியில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
2006 - சிங்கள நாளிதழான `மௌபிம' பத்திரிகையின் தமிழ்ப் பத்திரிகையாளரான முனுசாமி பரமேஸ்வரி, பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

பிறப்புக்கள்
1938 - ஆஸ்கர் ராபர்ட்சன், அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்
1961 - அருந்ததி ராய், இந்தியப் பெண் எழுத்தாளர்

இறப்புகள்
2012 வி. என். சிதம்பரம் திரைப்பட தயாரிப்பாளர், கமலா திரையரங்க உரிமையாளர்.

சிறப்பு நாள்
கொங்கோ மக்களாட்சிக் குடியரசு - தேசிய நாள்
படிவளர்ச்சி நாள்

நவம்பர் 23 நிகழ்வுகள்

நவம்பர் 23 நிகழ்வுகள்
*********************************

800 - திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் ஷார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான்.
1227 - போலந்து இளவரசன் முதலாம் லெஸ்செக் படுகொலை செய்யப்பட்டான்.
1248 - காஸ்டிலின் மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவில் நகரைக் கைப்பற்றினர்.
1499 - இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் நான்காம் எட்வேர்ட்டின் மகன் என உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டான்.
1867 - இரண்டு ஐரியர்களைச் சிறையிலிருந்து வெளியேற உதவியமைக்காக மூன்று ஐரியத் தேசியவாதிகள் இங்கிலாந்து, மான்செஸ்டரில் தூக்கிலிடப்பட்டனர்.
1890 - நெதர்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தான். அவனது மகள் இளவரசி வில்ஹெல்மினா அரசியாவதற்கு ஏதுவாக சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
1936 - முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது.
1940 - இரண்டாம் உலகப் போர்: ருமேனியா அச்சு அணி நாடுகளுடன் இணைந்தது.
1955 - கொக்கோஸ் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கைமாறியது.
1971 - மக்கள் சீனக் குடியரசின் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
1978 - இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சூறாவளி தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
1979 - மவுண்ட்பேட்டன் பிரபுவைக் கொலை செய்த குற்றத்துக்காக ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தொமஸ் மக்மாகன் என்பவருக்கு டப்ளினில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
1980 - தெற்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 4,800 பேர் கொல்லப்பட்டனர்.
1985 - எகிப்திய பயணிகள் விமானம் கிரேக்கத்தில் இருந்து புறப்படும்போது கடத்தப்பட்டு மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட போது எகிப்தியப் படைகள் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
1990 - ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.
1996 - எதியோப்பிய விமானம் கடத்தப்பட்டு எரிபொருள் முடிந்த நிலையில் இந்து மாகடலில் கொமொரோஸ் அருகில் வீழ்ந்ததில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
1998 - கம்போடியத் தலைவர் ஹுன் சென்னுக்கும் இளவரசர் நொரொடோம் ரனாரிட்டுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
2003 - வாரக்கணக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஜோர்ஜிய அதிபர் எடுவார்ட் ஷெவர்நாட்செ பதவி விலகினார்.
2005 - லைபீரியாவின் தலைவராக எலன் ஜான்சன் சர்லீஃப் தெரிவு செய்யப்பட்டார். ஆபிரிக்க நாடொன்றிண் முதலாவது பெண் தலைவர் இவராவார்.
2007 - அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது
2007 - ஆர்ஜெண்டீனாவுக்குத் தெற்கோ பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 154 பெர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்
1921 - சுரதா, கவிஞர் (இ. 2006)


1926 - சத்திய சாயி பாபா, இந்திய ஆன்மிகவாதி

இறப்புகள்
1973 - வி. அ. அழகக்கோன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.
1990 - ரூவால் டால், ஆங்கில எழுத்தாளர் (பி. 1916)
1990 - லெப்டினன்ட் கேணல் போர்க், விடுதலைப் புலிகளின் மாவீரர் (பி. 1959)

Friday, November 21, 2014

நவம்பர் 22 நிகழ்வுகள்

நவம்பர் 22 நிகழ்வுகள்
*********************************

1574 - சிலியின் ஜுவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
1908 - அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
1922 - துட்டன்காமுன் என்ற எகிப்திய பாரோ வின் 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமாதி கண்டுபிடிக்கப்பட்டது.
1935 - பசிபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமானத் தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை விட்டுப் புறப்பட்டது. (இவ்விமானம் நவம்பர் 29 இல் 110,000 தபால்களுடன் மணிலாவை அடைந்தது.)
1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியரின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கிரேக்கப் படைகள் அல்பேனியாவுக்குள் நுழைந்து கோரிட்சாவை விடுவித்தனர்.
1942 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனிய தளபதி பிரீட்றிக் பவுலஸ், ஸ்டாலின்கிராட்டில் தாம் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக ஹிட்லருக்கு தந்தி மூலம் செய்தி அனுப்பினான்.
1943 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தலைவர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில், சீனத் தலைவர் சியாங் காய்-செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்தனர்.
1943 - லெபனான், பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1956 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மெல்பேர்ணில் ஆரம்பமாயின.
1963 - அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி டெக்சாசில் லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்சாஸ் மாநில ஆளுநர் "ஜோன் கொனலி" படுகாயமடைந்தார். அதே நாளில் உதவி-ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் அமெரிக்காவின் 36வது அதிபராக ஆனார்.
1965 - இந்தோனீசியாவின் கம்யூனிசத் தலைவர் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
1974 - ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது.
1975 - பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மறைவை அடுத்து ஜுவான் கார்லொஸ் ஸ்பெயின் மன்னனானார்.
1989 - மேற்கு பெய்ரூட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் லெபனான் ஜனாதிபதி ரெனே மோவாட் கொல்லப்பட்டார்.
1990 - மார்கரட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியைத் துறந்தார்.
2002 - நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
2003 - ஜோர்ஜியாவில் அதிபர் எடுவார்ட் ஷெவர்நாட்சேயின் எதிராளிகள் நாடாளுமன்றத்தைத் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து அதிபரைப் பதவி விலகுமாறு கோரினர்.
2005 - ஜேர்மனியின் முதலாவது பெண் அதிபராக (சான்சிலர்) ஏங்கலா மேர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார்.
2005 - எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரம் வெளியிடப்பட்டது.
2007 - இலங்கை அரசாங்கம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.

பிறப்புக்கள்
1830-ஜல்காரிபாய், இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனை (இ. 1890)
1890 - சார்லஸ் டி கோல், பிரெஞ்சுத் தளபதியும், அரசியலாளரும் (இ. 1970)
1939 - முலாயம் சிங் யாதவ், இந்திய அரசியல்வாதி
1970 - மாவன் அத்தப்பத்து, இலங்கையின் துடுப்பாளர்.

இறப்புகள்
1963 - ஜோன் எப். கென்னடி, 35-வது அமெரிக்க ஜனாதிபதி, (பி. 1917)


1976 - மு. திருச்செல்வம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் (பி. 1907)

சிறப்பு நாள்
லெபனான் - விடுதலை நாள் (1943)

http://worldmessagee.blogspot.in/

Thursday, November 20, 2014

நவம்பர் 21 நிகழ்வுகள்

நவம்பர் 21 நிகழ்வுகள்
*********************************


1272 - மூன்றாம் ஹென்றி நவம்பர் 16 இல் இறந்ததையடுத்து அவனது மகன் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.
1789 - வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் 12வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
1791 - நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சு இராணுவத்தின் தளபதியானான்.
1877 - ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராஃப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தோமஸ் எடிசன் அறிவித்தார்.
1894 - சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறைமுகத்தை ஜப்பான் கைப்பற்றியது.
1905 - ஆற்றலுக்கும் திணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை அல்பேர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார்.
1916 - பிரித்தானியக் கப்பலான HMHS பிரித்தானிக் கிரேக்கத்தில் ஏஜியன் கடலில் வெடித்து மூழ்கியதில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
1920 - டப்ளினில் காற்பந்துப் போட்டி நிகழ்வொன்றில் பிரித்தானியப் படையினர் சுட்டதில் 14 ஐரிஷ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1942 - அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
1947 - இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. "ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா.
1962 - சீன மக்கள் விடுதலை இராணுவம் இந்தோ-சீனப் போரில் போர் நிறுத்தம் செய்வதாக ஒருதலைப் பட்சமாக அறிவித்தது.
1963 - பாரதத்தின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அபாச்சி (Nike Apache) ஏவப்பட்டது.
1969 - முதலாவது ஆர்ப்பநெட் (ARPANET) தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
1969 - ஓக்கினாவா தீவை 1972 இல் ஜப்பானியரிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜப்பான் பிரதமர் ஐசாக்கு சாட்டோவுக்கும் இடையில் வாஷிங்டனில் கையெழுத்திடப்பட்டது.
1971 - வங்காள தீவிரவாதக் குழுவான முக்தி பாஹினியின் உதவியுடன் இந்திய படைகள் கரிப்பூர் என்ற இடத்தில் பாகிஸ்தான் படைகளைத் தோற்கடித்தன.
1974 - பேர்மிங்ஹாமில் ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரின் குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
1980 - தமிழீழத் தேசியக்கொடி உருவாக்கப்பட்டது.
1980 - நெவாடாவில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 87 பேர் கொல்லப்பட்டு 650 பேர் காயமடைந்தனர்.
1990 - புலிகளின் குரல் வானொலி தொடங்கப்பட்டது.
1990 - மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.
1996 - புவேர்ட்டோ ரிக்கோவில் சான் ஜுவான் நகரில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
2004 - டொமினிக்காத் தீவில் இடம்பெற்ற நிலநடுக்கம் போர்ட்ஸ்மவுத் நகரில் பலத்த சேதத்தை விளைவித்தது.

பிறப்புக்கள்
1694 - வோல்ட்டயர், பிரெஞ்சு மெய்யியலாளர் (இ. 1778)
1902 - ஐசக் பாஷவிஸ் சிங்கர், போலந்து-அமெரிக்க எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1991)
1924 - மில்கா பிலானிஞ்ச், முன்னாள் யுகோசுலாவியப் பிரதமர் (இ. 2010)
1925 - வேல்ஜ்கோ கடிஜேவிக், முன்னாள் யுகோசுலாவிய இராணுவத் தளபதி
1931 - ரேவாஸ் தொகொனாத்சே, ஜோர்ஜிய அறிவியலாளர், (இ. 1985)
1948 - மைக்கல் சுலைமான், முன்னாள் லெபனானிய அரசுத்தலைவர்
1970 - ஜஸ்டின் லாங்கர், முன்னாள் ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்
1970 - சி. வி. இராமன் இந்திய பௌதிகவியலாளரும், நோபல் பரிசு
பெற்றவரும் (பி. 1888)
1996 - அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானியர் (பி. 1926)

சிறப்பு நாள்
உலகத் தொலைக்காட்சி நாள்
தமிழீழம் - தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்
வங்காள தேசம் - இராணுவத்தினர் நாள்

Wednesday, November 19, 2014

நவம்பர் 20 நிகழ்வுகள்


நவம்பர் 20 நிகழ்வுகள்
*************************************

284 - டயோக்கிளேசியன் ரோமப் பேரரசின் மன்னன் ஆனான்.

1194 - இத்தாலியின் பலேர்மோ நகரம் ஆறாம் ஹென்றியால் கைப்பற்றப்பட்டது.
1658 - இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் டச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
1700 - சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் நார்வா என்ற இடத்தில் ரஷ்யாவின் முதலாம் பீட்டரைத் தோற்கடித்தான்.
1910 - பிரான்சிஸ்கோ மடேரோ மெக்சிகோ அதிபர் போர்பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் தன்னை அதிபராகவும் அறிவித்தார். மெக்சிக்கோ புரட்சி ஆரம்பமாயிற்று.
1917 - உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
1923 - ஜேர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்)
1936 - ஸ்பானிய அரசியல்தலைவர் ஜோசே அண்டோனியோ பிறிமோ டெ ரிவேரா கொல்லப்பட்டார்.
1940 - இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, ருமேனியா, சிலவாக்கியா ஆகியன அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தன.
1947 - இளவரசி எலிசபெத் இளவரசர் பிலிப்பை திருமணம் புரிந்தார்.
1962 - சோவியத் ஒன்றியம் தனது ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்றுவதாக வாக்குறுதி அளித்தாதை அடுத்து, ஐக்கிய அமெரிக்கா கரிபியன் நாட்டுக்கெதிராக கொண்டுவந்த பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது.
1977 - ஆறு ஆண்டுகள் சிறைக்குப் பின் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் றோகண விஜேவீர விடுதலை செய்யப்பட்டார்.
1979 - சவுதி அரேபியாவில் மெக்காவில் காபா மசூதியைத் தாக்கிய சுணி முஸ்லிம் தீவிரவாதிகள் 6,000 பேரைப் பணயக் கைதிகளாக்கினர். பிரெஞ்சுப் படைகளின் உதவியுடன் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
1985 - மைக்ரொசொஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.
1988 - ராஜிவ் காந்திக்கும் மிக்கைல் கோர்பசேவுக்கும் இடையே இரு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனினும் சோவியத் கலைப்பை அடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது.
1992 - இங்கிலாந்தில் வின்சர் அரண்மனையில் தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.
1993 - மகெடோனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 116 பயணிகளில் 115 பேரும் 8 சிப்பந்திகளும் உயிரிழந்தனர்.
1994 - அங்கோலா அரசுக்கும் யுனீட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று.
1998 - பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சாரியா விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1999 - மன்னார் மடு தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 42 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்
1750 - திப்பு சுல்தான், மைசூர் பேரரசன் (இ. 1799)
1901 - நாசிம் ஹிக்மட், துருக்கிய கவிஞர் (இ 1963)
1923 - நதீன் கோர்டிமர், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (இ. 2014)
1942 - ஜோ பைடன், அமெரிக்க துணைத் தலைவர்
1980 - ஷாலினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்
1910 - லியோ தல்ஸ்தோய், ரஷ்ய எழுத்தாளர் (பி. 1828)

சிறப்பு நாள்
யுனிசெஃப் - குழந்தைகள் நாள்
மெக்சிக்கோ - புரட்சி நாள் (1910)
வியட்நாம் - ஆசிரியர் நாள் (Ngày nhà giáo Việt Nam)

Tuesday, November 18, 2014

நவம்பர் 19 நிகழ்வுகள்

நவம்பர் 19 நிகழ்வுகள்
*************************************

1493 - கொலம்பஸ் முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா எனப் பெயர் சூட்டினார்.
1794 - அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1816 - வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1881 - உக்ரேனில் ஒடீசா நகரில் விண்கல் ஒன்று வீழ்ந்தது.
1932 - சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
1941 - இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் HMAS சிட்னி, மற்றும் HSK கோர்மொரன் என்ற போர்க்கப்பல்களுக்கிடையில் நிழந்த மோதலில் இரண்டும் மூழ்கின. இதில் 6

1493 - கொலம்பஸ் முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா எனப் பெயர் சூட்டினார்.
1794 - அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1816 - வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1881 - உக்ரேனில் ஒடீசா நகரில் விண்கல் ஒன்று வீழ்ந்தது.
1932 - சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
1941 - இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் HMAS சிட்னி, மற்றும் HSK கோர்மொரன் என்ற போர்க்கப்பல்களுக்கிடையில் நிழந்த மோதலில் இரண்டும் மூழ்கின. இதில் 645 அவுஸ்திரேலியக் கடற்படையினரும் 77 நாசி ஜெர்மனியக் கடற்படையினரும் கொல்லப்பட்டனர்.
1942 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் சண்டை - சோவியத் படையினர் ஸ்டாலின்கிராட் நகர் மீது மீள் தாக்குதலை ஆரம்பித்தனர். இது பின்னர் அவர்களுக்கு வெற்றியை அளித்தது.
1946 - ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியன ஐநாவில் இணைந்தன.
1969 - அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ள்ஸ் கொன்ராட், அலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர்கள் என்ற பெயரினைப் பெற்றனர்.
1969 - பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர் பெலே தனது 1,000வது கோலைப் பெற்றார்.
1977 - எகிப்திய அதிபர் அன்வர் சதாத் அமைதிப் பேச்சுக்களுக்காக இஸ்ரேல் சென்றடைந்தார். இஸ்ரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே.
1977 - போர்த்துக்கல் போயிங் விமானம் ஒன்று மெடெய்ரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
1984 - இலங்கை இராணுவத்தின் வட மாகாணத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெரும யாழ்ப்பாணம், கட்டுவன் என்ற இடத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
1984 - மெக்சிக்கோ நகரில் எண்ணெய்க்குதங்களில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகளினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் கொல்லப்பட்டனர்.
1985 - பனிப்போர்: அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர்.
1991 - தமிழீழ காவல்துறை நிறுவப்பட்டது.
1999 - மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது சென்ஷோ விண்கலத்தை ஏவியது.
2005 - மகிந்த ராஜபக்ச இலங்கையின் 5வது நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

பிறப்புக்கள்
1831 - ஜேம்ஸ் கார்ஃபீல்ட், ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் (இ. 1881)
1835 - ராணி லட்சுமிபாய், இந்திய இராணி (இ. 1858)
1909 - பீட்டர் டிரக்கர் ஆஸ்திரிய மேலாண்மை அறிவியலாளர் (இ. 2005)
1917 - இந்திரா காந்தி, இந்தியப் பிரதமர் (இ. 1984)
1925 - சலில் சௌதுரி, வங்காள இசையமைப்பாளர் (இ. 1995_

இறப்புகள்
1998 - டெட்சுயா ஃபுஜித்தா, யப்பானிய வானிலை அறிஞர் (பி. 1920)
2008 - எம். என். நம்பியார், நடிகர் (பி. 1919
)

சிறப்பு நாள்
மாலி - விடுதலை நாள்
இந்திய தேசிய ஒருமைப்பாட்டு தினம்
உலகக் கழிவறை நாள்

நவம்பர் 18 நிகழ்வுகள்

நவம்பர் 18 நிகழ்வுகள்
*************************************
1421 - நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்,
1477 - இங்கிலாந்தில் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட முதலாவது நூலான "Dictes or Sayengis of the Philosophres" வில்லியம் கக்ஸ்டன் என்பவரால் வெளியிடப்படட்து.
1493 - கொலம்பஸ் புவேர்ட்டோ ரிக்கோ என இன்றழைக்கப்படும் நாட்டை முதன்முறையாகக் கண்ணுற்றார்.
1626 - புனித பீட்டர் பசிலிக்கா தேவாலயம் ரோம் நகரில் திறந்து வைக்கப்பட்டது.
1803 - எயிட்டி புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது எயிட்டி குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழிவகுத்தது.
1863 - டென்மார்க்கின் ஒன்பதாம் கிறிஸ்டியன் ஷ்லெஸ்விக் நகரம் டென்மார்க்குக்குச் சொந்தம் என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டான். இது 1864 இல் ஜேர்மன்-டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது.
1883 கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேர எல்லைகளை வகுத்துக் கொண்டன.
1903 - பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
1909 - நிக்கராகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள் அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டு போர்க்கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.
1918 - லாத்வியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1926 - ஜோர்ஜ் பேர்னாட் ஷா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார்.
1929 - அத்திலாந்திக் பெருங்கடலில் நியூஃபின்லாந்துக் கரையில் இடம்பெற்ற 7.2 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக பலத்த சேத எற்பட்டது. 28 பேர் கொல்லப்பட்டனர்.
1943 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் பேர்லின் நகரில் குண்டுகளை வீசியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். இச்சமரில் 9 பிரித்தானிய வான்கலங்கள் அழிக்கப்பட்டன.
1943 - உக்ரேனில் லூவிவ் என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 6,000 யூதர்கள் நாசிப் படைகளினால் கொல்லப்பட்டனர்.
1947 - நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச் என்ற இடத்தில் வர்த்தகத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 41 பேர் கொல்லப்பட்டனர்.
1978 - கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் மக்கள் கோயிலில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.
1987 - லண்டனில் கிங் க்ரொஸ் சுரங்கத் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற தீயில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
1989 - கோபெ செயற்கைமதி விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1991 - தமிழீழ காவல்துறையின் முதலாவது அணி பயிற்சி முடிந்து வெளியேறியது.
2002 - சென்னை புறநகர் பேருந்து நிலையம் கோயம்பேட்டில் திறக்கப்பட்டது.
2006 - ஈழப்போர்: மன்னார்க் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் இலங்கைக் கடற்படையினர் 10 பேர் கொல்லப்பட்டு 3 விடுதலைப் புலிகள் காயமடைந்தனர்.

பிறப்புக்கள்

1923 - அலன் ஷெப்பர்ட், விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கர் (இ. 1998)
1945 - மகிந்த ராஜபக்ச, இலங்கையின் 6வது ஜனாதிபதி

இறப்புகள்


1936 - வ. உ. சிதம்பரம்பிள்ளை, கப்பலோட்டிய தமிழன், (பி. 1872)

1952 - போல் எல்யூவார், பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1895)
1962 - நீல்ஸ் போர், இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1885)

சிறப்பு நாள்

.லாத்வியா - விடுதலை நாள் (1918)
ஓமான் - தேசிய நாள்

http://worldmessagee.blogspot.in/2014/11/18.html

Sunday, November 16, 2014

நவம்பர் 17 நிகழ்வுகள்

நவம்பர் 17 நிகழ்வுகள்
*************************************
1292 - ஜோன் பலியல் ஸ்கொட்லாந்தின் அரசன் ஆனான்.
1511 - ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன.
1558 - இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார்.
1796 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன.
1820 - கப்டன் நத்தானியல் பால்மர் அண்டார்ட்டிக்காவை அடைந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். பால்மர் குடாநாடுக்கு இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது.
1831 - எக்குவாடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியன பாரிய கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.
1869 - எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.
1873 - பெஸ்ட், பூடா, மற்றும் ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட புடாபெஸ்ட் நகரம் ஹங்கேரியின் தலைநகராக்கப்பட்டது.
1878 - இத்தாலியின் முதலாம் உம்பேர்ட்டோ மீதான முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது.
1903 - ரஷ்யாவின் சமூக சனநாயக தொழிற் கட்சி போல்ஷெவிக் (பெரும்பான்மை), மேன்ஷெவிக் (சிறுபான்மை) என இரண்டாகப் பிளவுண்டது.
1918 - யாழ்ப்பாணத்தில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிவாரண நிதியம் அமைக்கப்பட்டது.
1922 - முன்னாள் ஓட்டோமான் பேரரசின் சுல்தான் ஆறாம் மெஹ்மெட் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டான்.
1933 - ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.
1939 - செக் நாட்டில் நாசி எதிப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 9 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
1950 - 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ தனது 15வது வயதில் திபெத்தின் அரசுத் தலைவரானார்.
1968 - அலெக்சாண்ட்ரொஸ் பனகோலிஸ் என்பவருக்கு கிரேக்க சர்வாதிகாரி ஜோர்ஜ் பப்படொபவுலொசைக் கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1970 - வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் தொடர்பாக அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
1970 - சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய ரோபோ ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.
1970 - டக்லஸ் ஏங்கெல்பேர்ட் முதலாவது கணினி mouse க்கான காப்புரிமம் பெற்றார்.
1989 - பனிப்போர்: செக்கோசிலவாக்கியாவில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல் கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்பமாக அமைந்தது.
2003 - ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர் கலிபோர்னியாவின் ஆளுநரானார்.

பிறப்புக்கள்
1904 - இசாமு நொகுச்சி சிற்பக் கலைஞரும், கட்டடக் கலைஞரும் (இ. 1988)
1909 - சி. இலக்குவனார், தமிழறிஞர் (இ. 1973)
1920 - ஜெமினி கணேசன் தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2005)

1927 - கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (இ. 2009)
1930 - பிரேம்ஜி ஞானசுந்தரம் முற்போக்கு எழுத்தாளர், பத்திரிகையாளர் (இ. 2014)

இறப்புகள்
1558 - இங்கிலாந்தின் அரசி முதலாம் மேரி (பி. 1516)
1796 - உருசியாவின் இரண்டாம் கத்தரீன், உருசிய அரசி (பி. 1729)
1858 - ராபர்ட் ஓவன், வேல்சு நாட்டு செயல்திறனாளர் (பி. 1771)
1917 - ஆகுஸ்ட் ரொடான், பிரெஞ்சு சிற்பி (பி. 1840)
1928 - லாலா லஜபத் ராய், இந்திய எழுத்தாளர், அரசியல்வாதி (பி. 1865)
1973 - மிரா அல்பாசா, பிரெஞ்சு-இந்திய ஆன்மிகத் தலைவர் (பி. 1878)
2000 - இலூயீ நீல், பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)
2013 - டோரிஸ் லெசிங், ஆங்கிலேய எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1919)
2013 - திடீர் கன்னையா, நகைச்சுவை நடிகர்

சிறப்பு நாள்
அனைத்துலக மாணவர் நாள்

நவம்பர் 16 நிகழ்வுகள்

நவம்பர் 16 நிகழ்வுகள்
*************************************
1384 - பெண்ணாக இருந்தாலும் பத்து வயது "ஜாட்வீகா" என்பவள் போலந்தின் மன்னனாக முடிசூடினாள்.
1532 - ஸ்பானியத் தளபதி பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசின் மன்னன் அட்டஹுவால்பாவைத் தோற்கடித்து சிறைப்பிடித்தான்.
1632 - சுவீடனின் குஸ்டாவிஸ் அடோல்பஸ் போரில் கொல்லப்பட்டான்.
1846 - இலங்கையில் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1849 - அரசுக்கெதிராகப் புரட்சி செய்ததாகக் குற்றம் சாட்டி ரஷ்ய எழுத்தாளரான பியோதர் தஸ்தயெவ்ஸ்கிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் தண்டனை பின்னர் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது.
1885 - கனடாவின் மேட்டிஸ் பழங்குடித் தலைவர் லூயிஸ் ரியெல் தூக்கிலிடப்பட்டார்.
1896 - முதற்தடவையாக மின்சாரம் மின்னாக்கி ஒன்றிலிருந்து நகருக்கு அனுப்பப்பட்டது. இது நடந்தது நியூ யோர்க் நகரில்.
1904 - ஜோன் பிளெமிங் வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார்.
1907 - ஒக்லகோமா ஐக்கிய அமெரிக்காவின் 46வது மாநிலமாக இணைந்தது.
1920 - ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை குவாண்டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.
1933 - ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஆரம்பித்தன.
1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் விமானப் படைகள் ஜெர்மனியின் ஹாம்பேர்க் நகரில் குண்டுகளை வீசின.
1944 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் டியூரென் நகரம் கூட்டுப் படைகளின் குண்டுத் தாக்குதலில் முற்றாக அழிந்தது.
1945 - யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1945 - பனிப்போர்: ஐக்கிய அமெரிக்காவின் இராணுவம் ஜெர்மனியின் அறிவியலாளர்கள் 88 பேரை தனது வானியல் தொழில்நுட்பத்தில் உதவுவதற்காக இரகசியமாக நாட்டுக்குள் அனுமதித்தது.
1965 - சோவியத்தின் வெனேரா 3 விண்கப்பல் வெள்ளி கோளுக்கு செலுத்தப்பட்டது. வேறொரு கோளின் தரையை அடைந்த முதலாவது விண்கப்பல் இதுவாகும்.
1973 - நாசா மூன்று விண்வெளி வீரர்களுடன் ஸ்கைலாப் 4 84-நாள் திட்டத்தில் விண்ணுக்கு அனுப்பியது.
1988 - சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல்களில் பெனசீர் பூட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2002 - சார்ஸ் நோய் முதன் முதலில் சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில் பதியப்பட்டது.

பிறப்புக்கள்
1922 - ஜோசே சரமாகூ, நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கேய எழுத்தாளர்
1930 - சின்னுவ அச்சிப்பே, நைஜீரிய எழுத்தாளர்
1982 - அமாரே ஸ்டெளடமையர், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்
1999 - டானியல் நேத்தன்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1928)
2006 - மில்ட்டன் ஃப்ரீட்மன், நோபல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணர் (பி. 1912)


சிறப்பு நாள்
உலக சகிப்புத் தன்மை நாள்

Friday, November 14, 2014

நவம்பர் 15 நிகழ்வுகள்

நவம்பர் 15 நிகழ்வுகள்
*************************************

1505 - போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்ஸ் டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப்படைத் தளபதி வில்லியம் ஷேர்மன் அட்லாண்டா நகரைத் தீக்கிரையாக்கி ஜோர்ஜியாவின் சவான்னா துறைமுகம் நோக்கி நகர்ந்தார்.
1889 - பிரேசில் குடியரசாகியது. இரண்டாம் பெதரோ ஆட்சியிழந்தான்.
1926 - என்பிசி வானொலி 24 நிலையங்களுதன் தனது வானொலி சேவையைத் தொடங்கியது.
1941 - நாசி ஜெர்மனியில் சில உயர் அதிகாரிகளைத் தவிர்த்து அனைத்து ஓரினச்சேர்க்கையாளர்களையும் வதைமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
1942 - இரண்டாம் உலகப் போர்: சொலமன் தீவுகளில் குவாடல்கனல் என்ற இடத்தில் ஜப்பானியப் கடற்படையுடன் இடம்பெற்ற மோதல்களில் கூட்டுப் படைகள் வெற்றி பெற்றன.
1943 - நாசி ஜெர்மனியில் அனைத்து ஜிப்சிகளையும் யூதர்களுக்கு இணையாக வதமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
1948 - இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
1949 - நாதுராம் கோட்சே, மற்றும் நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.
1966 - ஜெமினி 12 விண்கலம் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
1969 - வியட்நாம் போர்: வாசிங்டன் டிசியில் 250,000-500,000 பேர் போருக்கெதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குபற்றினர்.
1970 - சோவியத்தின் லூனா தானூர்தி சந்திரனில் தரையிறங்கியது.
1971 - இண்டெல் நிறுவனம் உலகின் வர்த்தகரீதியிலான முதலாவது 4004 என்ற single-chip microprocessor ஐ வெளியிட்டது.
1978 - டிசி-8 ரக தனியார் பயணிகள் விமானம் கொழும்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.
1983 - வடக்கு சைப்பிரஸ் துருக்கியக் குடியரசு நிறுவப்பட்டது. துருக்கி மட்டுமே இதனை அங்கீகரித்தது.
1988 - சோவியத் ஒன்றியத்தின் ஆளற்ற பூரான் விண்ணோடம் தனது முதலாவது கடைசியுமான பயணத்தை ஆரம்பித்தது.
1988 - பாலஸ்தீன நாடு பாலஸ்தீன தேசிய கவுன்சிலினால் அறிவிக்கப்பட்டது.
1990 - அட்லாண்டிஸ் விண்ணோடம் STS-38 கப்பலை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
2002 - ஹூ சிங்தாவ் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.
2000 - இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.
2007 - வங்க தேசத்தில் கிளம்பிய பெரும் சூறாவளியினால் 5,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்
1738 - வில்லியம் ஹேர்ச்செல், விண்கோள் யுரேனசைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி (இ. 1822)
1986 - சானியா மிர்சா, இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை

இறப்புகள்
1630 - ஜொஹான்னெஸ் கெப்லர், ஜெர்மானிய கணிதவியலாளரும், வானியலாளரும் (பி. 1571)
1917 - எமில் டேர்க்கேம், பிரெஞ்சு சமூகவியலாளர் (பி. 1858)
1949 - நாத்தூராம் கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (பி. 1910)
1949 - நாராயண் ஆப்தே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (பி. 1911)
1961 - இலங்கையர்கோன், ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர், நாடகாசிரியர்
1982 - வினோபா பாவே, (பி. 1895)

சிறப்பு நாள்
பிரேசில் - குடியரசு நாள் (1889)
பாலஸ்தீனம் - விடுதலை நாள் (அறிவிப்பு: 1988)

Thursday, November 13, 2014

நவம்பர் 14 நிகழ்வுகள்

நவம்பர் 14 நிகழ்வுகள்
*************************************
1885 - செர்பியா பல்கேரியா மீது போர் தொடுத்தது.
1889 - நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.
1918 - செக்கொஸ்லவாக்கியா குடியரசாகியது.
1922 - பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.
1940 - இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தில் கவெண்ட்ரி நகரம் ஜேர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதமடைந்தது. கவெண்ட்ரி தேவாலயம் முற்றாக அழிந்தது.
1956 - ஹங்கேரியில் போர் முடிவுக்கு வந்தது.
1963 - ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி என்னும் தீவு வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது.
1965 - வியட்நாம் போர்: லா ட்ராங் என்ற இடத்தில் அமெரிக்கப் படைகளுக்கும் வடக்கு வியட்நாம் படைகளுக்கும் இடையில் பெரும் போர் வெடித்தது.
1969 - அப்பல்லோ திட்டம்: அப்போலோ 12 விண்கப்பல் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.
1970 - மேற்கு வேர்ஜீனியாவில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
1971 - மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே பூமியில் இருந்து வேறொரு கோளின் செயற்கைச் செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.
1975 - மேற்கு சகாராவை விட்டு ஸ்பெயின் விலகியது.
1990 - கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனிகளின் இணைப்பிற்குப் பின்னர் போலந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.
1991 - நாடு கடந்த நிலையில் வாழ்ந்த கம்போடியாவின் இளவரசர் நொரொடோம் சிஹானூக் 13 ஆண்டுகளின் பின்னர் புனோம் பென் திரும்பினார்.
1996 - டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
2001 - ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை ஆப்கான் கூட்டுப் படைகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.

பிறப்புக்கள்
1840 - குளோட் மொனே, பிரெஞ்சு ஓவியர் (இ. 1926)
1889 - ஜவகர்லால் நேரு, இந்தியப் பிரதமர் (இ. 1964)
1930 - எட்வேர்ட் வைட், நாசா விண்வெளி வீரர் (இ. 1967)
1931 - இரா. பெருமாள் ராசு, இந்தியக் கவிஞர்
1954 - காண்டலீசா ரைஸ், ஐக்கிய அமெரிக்காவின் 66வது செயலாளர்
1971 - அடம் கில்கிறிஸ்ற், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.

இறப்புகள்
1831 - ஹெகல், ஜெர்மன் நாட்டு மெய்யியல் அறிஞர் (பி. 1770)

சிறப்பு நாள்
இந்தியா: குழந்தைகள் நாள்.
உலக நீரிழிவு நோய் நாள்

நவம்பர் 13 நிகழ்வுகள்

நவம்பர் 13 நிகழ்வுகள்
*************************************

1851 - வாஷிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர்.
1887 - மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.
1887 - நவம்பர் 11 இல் சிக்காகோவில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.
1918 - ஒட்டோமான் பேரரசின் தலைநகர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றினர்.
1950 - வெனிசுவேலாவின் அதிபர் ஜெனரல் கார்லொஸ் டெல்காடோ சால்போட் படுகொலை செய்யப்பட்டார்.
1957 - கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.
1965 - அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல் பகாமசில் மூழ்கியதில் 90 பேர் கொல்லப்பட்டானர்.
1970 - போலா சூறாவளி: கிழக்குப் பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் 500,000 பேர் வரையில் உயிரிழந்தனர். இது 20ம் நூற்றாண்டின் மிகப் பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது).
1971 - ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 விண்கப்பல் செவ்வாய்க் கோளை சுற்றி வந்தது. இதுவே பூமியை விட வேறொரு கோளைச் சுற்றிவந்த முதலாவது விண்கப்பலாகும்.
1985 - கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லபட்டனர்.
1989 - இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர இராணுவத்தினரால் முதல் நாள் கைது செய்யப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1990 - உலக வலைப் பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது.
1993 - யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
1993 - தவளை நடவடிக்கை: யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் நாகதேவன்துறை இராணுவ, கடற்படைக் கூட்டுத்தளங்களை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து பல தாங்கிகளையும் விசைப்படகுகளையும் கைப்பற்றினர். மொத்தம் 4 நாட்கள் இடம்பெற்ற இத்தாக்குதலில் 469 புலிகள் இறந்தனர்.
1994 - ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் மக்கள் முடிவு செய்தனர்.
1995 - சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்களும் இரண்டு இந்தியர்களும் உயிரிழந்தனர்.

பிறப்புக்கள்
354 - ஹிப்போவின் அகஸ்டீன், மெய்யியலாளர், இறையியலாளர் (இ. 430)
1934 - கமால் கமலேஸ்வரன், மேற்கத்திய இசைக் கலைஞர்
1935 - பி. சுசீலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்


1969 - அயான் கேர்சி அலி, சோமாலியப் பெண்ணியவாதி
1979 - ரான் ஆர்டெஸ்ட், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்
1989 - ரோகண விஜேவீர, இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் (பி. 1943)
2002 - கணபதி கணேசன், மலேசிய இதழாசிரியர் (பி. 1955)