Tuesday, October 28, 2014

அக்டோபர் 30 நிகழ்வுகள்

அக்டோபர் 30 நிகழ்வுகள்

1485 - ஏழாம் ஹேன்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1502 - வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.
1831 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமை கிளர்ச்சி செய்த நாட் டர்னர் வேர்ஜீனியாவில் கைது செய்யப்பட்டான்.
1905 - ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் ரஷ்யாவின் முதலாவது அரசியலமைப்பை அறிவித்து பிரதிநிதிகள் அவையை நிறுவினான்.
1918 - ஒட்டோமான் பேரரசு கூட்டுப் படைகளுடன் உடன்பாட்டுக்கு வந்ததில் மத்திய கிழக்கில் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
1920 - அவுஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி சிட்னியில் அமைக்கப்பட்டது.
1922 - முசோலினி இத்தாலியின் பிரதமர் ஆனார்.
1925 - ஜோன் லோகி பயர்ட் பிரித்தானியாவின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்.
1941 - மேற்கு உக்ரைனில் 1,500 யூதர்கள் நாசிகளினால் பெல்செக் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
1945 - இந்தியா ஐநாவில் இணைந்தது.
1961 - சோவியத் ஒன்றியம் 50 மெகாதொன் அளவுள்ள "சார் பொம்பா" என்ற அணுகுண்டை வெடிக்க வைத்தது. இதுவே இந்நாள் வரை வெடிக்கப்பட்ட மிகப்பெரிய அணுகுண்டாகும்.
1961 - ஜோசப் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவின் கிரெம்லினில் லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
1964 - இலங்கையின் மலையகத் தமிழர்களை நாடு கடத்த உதவிய சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
1970 - வியட்நாமில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 293 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1972 - சிக்காகோவில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதியதில் 45 பேர் கொல்லப்பட்டனர்.
1973 - ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் பொஸ்பரஸ் பாலம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைக்கப்பட்டது.
1985 - சலேஞ்சர் விண்ணோடம் தனது கடைசி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தது.
1991 - மத்திய கிழக்கு அமைதி மாநாடு மாட்ரிட் நகரில் ஆரம்பமானது.
1995 - கனடாவில் இருந்து பிரிந்து செல்ல கியூபெக் மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு 50.6% to 49.4% என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.
2001 - இலங்கைப் பிரதமர் பேசவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் இறந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.
2006 - ஜெனீவாவில் விடுதலைப் புலிகளிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.
2006 - பாகிஸ்தானின் எல்லையோரத்தில் கார் பகுதியில் உள்ள மதரசா மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்
1735 - ஜான் ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் (இ. 1826)
1821 - ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1881)
1908 - முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1963)
1909 - ஹோமி பாபா, இந்திய அணிவியல், இயற்பியல் ஆராய்ச்சியாளர் (இ. 1966)
1962 - கொட்னி வோல்ஷ், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட பந்து வீச்சாளர்
1977- டிமிட்ரி மாஸ்கரேஞாஸ், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்


இறப்புகள்
1910 - ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1828)
1963 - முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)
1973 - ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (பி. 1902)
1975 - குஸ்டாவ் லுட்வீக் ஹேர்ட்ஸ், ஜேர்மனிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1887)
1979 - சுபத்திரன், இலங்கையின் முற்போக்கு இலக்கிய கவிஞர் (பி. 1935)
1999 - சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கையின் மலையகத் தமிழர்களின் அரசியல் தலைவர் (பி. 1913).

அக்டோபர் 29 நிகழ்வுகள்

அக்டோபர் 29 நிகழ்வுகள்

969 - பைசண்டைன் படைகள் சிரியாவின் அண்டியோக் நகரைக் கைப்பற்றின.
1422 - ஏழாம் சார்ல்ஸ் பிரான்சின் மன்னனாக முடிசூடினான்.
1618 - ஆங்கிலேய எழுத்தாளரும் நாடுகாண் பயணியுமான சேர் வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சிற்கு எதிராக சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரனதண்டனக்குள்ளாக்கப்பட்டார்.
1665 - போர்த்துக்கல் படையினர் கொங்கோ பேரரசைத் தோற்கடித்து அதன் மன்னன் முதலாம் அண்டோனியாவைக் கொன்றனர்.
1859 - ஸ்பெயின் மொரோக்கோ மீது போரை அறிவித்தது.
1863 - சுவிட்சர்லாந்தில் கூடிய 16 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர்.
1886 - அன்றைய பிரித்தானிய இந்திய அரசுக்கும், திருவாங்கூர் மன்னருக்கும் இடையே முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1901 - ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் வில்லியம் மக்கின்லியைக் கொலை செய்த குற்றத்திற்காக லியோன் சொல்கோஸ் என்பவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1913 - எல் சல்வடோரில் பெரும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்.
1922 - முசோலினி இத்தாலியின் பிரதம மந்திரியானார்.
1923 - ஓட்டோமான் பேரரசு முறிவடைந்ததைத் தொடர்ந்து துருக்கி குடியரசானது.
1929 - "கருப்பு செவ்வாய்" என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூ யோர்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆரம்பமானது.
1948 - "சாஃப்சாஃப்" என்ற பாலஸ்தீனக் கிராமமொன்றில் புகுந்த இஸ்ரேலியர்கள் 70 பாலஸ்தீனர்களைச் சுட்டுக் கொன்றனர்.
1950 - அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்தது.
1956 - இஸ்ரேலியப் படைகள் சினாய் தீபகற்பத்தைக் கைப்பற்றி எகிப்தியப் படைகளை சூயஸ் கால்வாய் நோக்கி விரட்டினர்.
1961 - ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறியது.
1964 - தங்கனிக்கா மற்றும் சன்சிபார் இரண்டும் இணைந்து தன்சானியாக் குடியரசு ஆகியது.
1964 - 565 கரட் (113 கிராம்) "ஸ்டார் ஒஃப் இந்தியா" உட்படப் பல பெறுமதி மிக்க வைரங்கள் நியூ யோர்க் நகரில் உள்ள அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டன.
1967 - மொண்ட்ரியால் நகரில் 50 மில்லியன் மக்கள் கண்டு களித்த எக்ஸ்போ 67 உலகக் கண்காட்சி முடிவடைந்தது.
1969 - உலகின் முதலாவது ஒரு கணினியில் இருந்து வேறொரு கணினிக்கான தொடுப்பு ARPANET மூலம் இணைக்கப்பட்டது.
1983 - துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,300 பேர் கொல்லப்பட்டனர்.
1991 - நாசாவின் கலிலியோ விண்கலம் 951 காஸ்ராவுக்குக் கிட்டவாகச் சென்று சிறுகோள் ஒன்றுக்குக் கிட்டவாக சென்ற முதலாவது விண்கலம் ஆனது.
1998 - டிஸ்கவரி விண்ணோடம் STS-95 என்ற விண்கப்பலுடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1998 - 39 பேருடன் சென்ற துருக்கிய விமானம் ஒன்று குர்தியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது.
1998 - சூறாவளி மிட்ச் ஹொண்ட்டூராசைத் தாக்கியது.
1999 - ஒரிஸாவில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 10,000 பேர் வரை இறந்தனர். 2.5 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.
2002 - வியட்நாமின் ஹோ ஷி மின் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
2005 - டில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 60பேர் வரை கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்
1931 - வாலி, தமிழகக் கவிஞர் (இ. 2013)
1971 - மதிவ் எய்டன், அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர்
1981 - ரீமா சென், இந்திய திரைப்பட நடிகை
1985 - விஜேந்தர் குமார், இந்தியக் குத்துச்சண்டை மெய்வல்லுனர்

இறப்புகள்
2001 - சுந்தா சுந்தரலிங்கம், இலங்கை வானொலி, மற்றும் பிபிசி தமிழோசை அறிவிப்பாளர்
2007 - லா. சா. ராமாமிர்தம், தமிழ் எழுத்தாளர் (பி. 1916)

சிறப்பு நாள்
துருக்கி - குடியரசு நாள் (1923)

அக்டோபர் 28 நிகழ்வுகள்

அக்டோபர் 28 நிகழ்வுகள்

306 - மாக்செண்டியஸ் ரோமப் பேரரசன் ஆனான்.
312 - முதலாம் கொன்ஸ்டண்டீன் மாக்செண்டியசைத் தோற்கடித்து ரோமப் பேரரசனானான்.
1492 - ஸ்பெயின் நாட்டுக் கடலோடியான கொலம்பசும் அவரது கூட்டத்தினரும் வழி தவறிச் சென்று கியூபாவில் கரை இறங்கினர்.
1775 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டனில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை பிரித்தானியா தடுத்தது.
1834 - சுவான் ஆற்றுக் குடியேற்றத்தில் (தற்போதய மேற்கு அவுஸ்திரேலியாவில்) பழங்குடிகளுக்கும் ஆங்கிலேயக் குடியேற்ற வாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பல பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.
1886 - நியூ யார்க்கில் அமெரிக்க அதிபர் குரோவர் கிளீவ்லாண்ட் விடுதலைச் சிலையைத் திறந்து வைத்தார்.
1918 - முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-ஹங்கேரியிடம் இருந்து செக்கொசிலவாக்கியா விடுதலை பெற்றது.
1918 - மேற்கு கலீசியாவில் புதிய போலந்து அரசு அமைக்கப்பட்டது.
1922 - முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிஸ்டுகள் ரோம் நகரை சென்றடைந்து இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.
1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி, அல்பேனியா ஊடாக கிறீஸ் நாட்டைக் கைப்பற்றியது. இந்நாள் கிறீசின் "ஓக்கி நாள்" (Όχι=No, இல்லை) ஆக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.
1941 - லித்துவேனியாவின் கௌனாஸ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் 9,000 யூதர்களை சுட்டுக் கொன்று அதே இடத்தில் புதைத்தனர்.
1942 - கனடா முதல் அலாஸ்கா வரையான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
1942 - போலந்தின் கிராக்கொவ் நகரில் இருந்து 2,000 யூத சிறுவர்களும் 6,000 பெரியவர்களும் நாசிகளினால் வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
1948 - சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் போல் முல்லர் டிடிரியைக் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு பெற்றார்.
1962 - கியூபாவிலிருந்து சோவியத் ஏவுகணைகளை அகற்றுவதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவ் அறிவித்தார்.
1971 - ஐக்கிய இராச்சியம் தனது முதலாவது (2007 வரை ஒன்றே ஒன்றுமான) "புரொஸ்பெரோ" என்ற செய்மதியை விண்ணுக்கு ஏவியது.
1972 - முதலாவது ஏர்பஸ் A300 பறக்க விடப்பட்டது.
1985 - சண்டினீஸ்டாவின் டானியேல் ஒர்ட்டேகா நிக்கராகுவாவின் அதிபரானார்.
1985 - மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.
2001 - பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் கண்முடித்தனமாக சுட்டதில் பெண்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
2001 - கேரளாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நாகர்கோயில் பகுதியில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டது.
2006 - 1930களில் ரஷ்யக் கம்யூனிஸ்டுகளால் உக்ரேனின் பிகீவ்னியா காட்டில் கொலை செய்யப்பட்ட 817 உக்ரேனியர்களினது இறுதிக் கிரியைகள் அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றன.
2006 - தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே 8 மாதங்களாகத் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுக்கள் ஜெனீவாவில் மீண்டும் ஆரம்பமாயின.

பிறப்புக்கள்
1955 - பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர், கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்
1956 - மஹ்மூத் அஹ்மதிநெஜாத், ஈரான் குடியரசுத் தலைவர்

இறப்புகள்
1627 - ஜஹாங்கீர், இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னன் (பி. 1569)
1704 - ஜான் லாக், ஆங்கிலேய தத்துவவியலாளர் (பி. 1632)
1900 - மாக்ஸ் முல்லர், ஜெர்மனிய மொழியியலாளர் (பி. 1823)
1997 - மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார், கருநாடக இசை வீணை வாத்தியக்கலைஞர் (பி: 1920)

சிறப்பு நாள்
செக் குடியரசு, சிலவாக்கியா - தேசிய நாள் (1918)

அக்டோபர் 27 நிகழ்வுகள்

  • அக்டோபர் 27 நிகழ்வுகள்

  • 939 - முதலாம் எட்மண்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
  • 1275 - ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது.
  • 1682 - பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது.
  • 1795 - ஸ்பானியக் குடியேற்றநாடுகளுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டது.
  • 1806 - பிரெஞ்சுப் படையினர் பேர்லின் நகரினுள் நுழைந்தனர்.
  • 1807 - பிரெஞ்சு-ஸ்பானியப் படைகள் போர்த்துக்கலைக் கைப்பற்றின.
  • 1810 - ஐக்கிய அமெரிக்கா முன்னாள் ஸ்பானியக் குடியேற்ற நாடான மேற்கு புளோரிடாவை இணைத்துக் கொண்டது.
  • 1867 - கரிபால்டியின் படைகள் ரோம் நகருள் புகுந்தன.
  • 1870 - 140,000 பிரெஞ்சுப் படை வீரர்கள் மெட்ஸ் நகரில் இடம்பெற்ற போரில் பிரஷ்யாவிடம் சரணடைந்தனர்.
  • 1891 - ஜப்பானில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 7000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
  • 1904 - முதலாவது சுரங்க நியூயார்க் நகர சப்வே பாதை திறக்கப்பட்டது. இதுவே ஐக்கிய அமெரிக்காவில் மிகப் பெரியதும், உலகில் மிகப் பெரிய சுரங்கப் பாதைகளில் ஒன்றும் ஆகும்.
  • 1924 - உஸ்பெக் சோவியத் குடியரசு சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது.
  • 1953 - தெற்கு அவுஸ்திரேலியாவில் ஈமியூ ஃபீல்ட் என்ற இடத்தில் டோட்டெம் 2 என்ற பிரித்தானிய அணுவாயுதச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • 1958 - பாகிஸ்தான் முதலாவது சனாதிபதி இஸ்காண்டர் மிர்சா இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து இறக்கப்பட்டு ஜெனரல் அயூப் கான் ஆட்சியைக் கைப்பற்றினார்.
  • 1961 - நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது.
  • 1961 - மூரித்தானியா, மங்கோலியா ஆகியன ஐக்கிய நாடுகள் அவையில் சேர்ந்தன.
  • 1962 - கியூபா ஏவுகணை நெருக்கடி: ஐக்கிய அமெரிக்காவின் U-2 விமானம் ஒன்று கியூபாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
  • 1971 - கொங்கோ மக்களாட்சிக் குடியரசு சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • 1979 - செயின்ட் வின்சென்ட் கிரெனேடின்ஸ் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1981 - சோவியத் நீர்மூழ்கிக் கப்பல் U 137 சுவீடனின் கிழக்குக் கரையில் மூழ்கியது.
  • 1982 - யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டது.
  • 1990 - வட இலங்கை முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்: யாழ்ப்பாண மாவட்டத்தைத் தாயகமாக கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.
  • 1991 - துருக்மெனிஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
  • 1991 - போலந்தில் 1936ம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக சுதந்திரமான தேர்தல்கள் இடம்பெற்றன.
  • 1999 - ஆர்மீனியாவில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பிரதமர், அவைத் தலைவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2005 - பாரிசில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது.
  • 2007 - கொங்கோவில் இடம்பெற்ற பெரு வெள்ளம் காரணமாக 30 பேர் கொல்லப்பட்டு 100 பேர் காயமடைந்தனர்.

  • பிறப்புக்கள்
  • 1728 - ஜேம்ஸ் குக், பிரித்தானியாவின் கடற்படைக் கப்டன், நாடுகாண் பயணி (இ. 1779)
  • 1782 - நிக்கோலோ பாகானீனி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1840)
  • 1858 - தியொடோர் ரோசவெல்ட், 26ஆவது அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (இ. 1919)
  • 1877 - ஜார்ஜ் தாம்சன், ஆங்கிலேயெத் துடுப்பாட்டக் காரர் (இ. 1943)
  • 1920 - கே. ஆர். நாராயணன், இந்தியாவின் 10வது குடியரசுத் தலைவர் (இ. 2005)
  • 1932 - சில்வியா பிளாத், அமெரிக்கக் கவிஞர் (இ. 1963)
  • 1945 - லுலா ட சில்வா, பிரேசில் அரசுத் தலைவர்
  • 1977 - குமார் சங்கக்கார, இலங்கையின் துடுப்பாளர்
  • 1984 - இர்பான் பதான், இந்தியத் துடுப்பாளர்

  • இறப்புகள்
  • 1605 - அக்பர், முகலாய மன்னன் (பி. 1542)
  • 1845 - சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே, பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1785)
  • 1980 - ஜோன் விளெக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1899)
  • 1992 - டேவிட் போம், அமெரிக்க இயற்பியலாளர், தத்துவவியலாளர் (பி. 1917)
  • 2009 - டேவிட் செப்பர்ட், ஆங்கிலேய துடுப்பாட்ட நடுவர் (பி. 1940)

  • சிறப்பு நாள்
  • செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் - விடுதலை நாள் (1979)
  • துருக்மெனிஸ்தான் - விடுதலை நாள் (1991)

Sunday, October 26, 2014

அக்டோபர் 26 நிகழ்வுகள்

அக்டோபர் 26 நிகழ்வுகள்

740 - ரோமப் பேரரசின் கொன்ஸ்டண்டீனபோல் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் பலத்த உயிர்ச் சேதத்தை உண்டுபண்ணியது.
1640 - ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1776 - அமெரிக்கப் புரட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் பெஞ்சமின் பிராங்கிளின் பிரான்ஸ் புறப்பட்டார்.
1859 - வடக்கு வேல்சில் றோயல் சார்ட்டர் என்ற கப்பல் கவிழ்ந்ததில் 459 பேர் இறந்தனர்.
1876 - இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு பிரித்தானிய அரசரால் எடுக்கப்பட்டது.
1905 - நோர்வே, சுவீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1917 - முதலாம் உலகப் போர்: இத்தாலி கபொரேட்டொ என்ற இடத்தில் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா நாடுகளுடன் மோதி கடும் தோல்வியைச் சந்தித்தது.
1917 - முதலாம் உலகப் போர்: பிரேசில் போரில் குதித்தது.
1942 - இரண்டாம் உலகப் போர்: சான்டா குரூஸ் தீவுகளில் இரண்டு அமெரிக்க வான்படைக் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
1947 - காஷ்மீர் மகாராஜா இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கச் சம்மதித்தார்.
1947 - ஈராக்கிலிருந்து பிரித்தானிய இராணுவம் வெளியேறியது.
1955 - ஆஸ்திரியாவில் கடைசி கூட்டுப்படைகள் வெளியேறின. ஆஸ்திரியா அணிசேரா நாடாக தன்னை அறிவித்தது.
1956 - ரஷ்ய இராணுவம் ஹங்கேரியை முற்றுகையிட்டது
1977 - பெரியம்மை நோய் தாக்கிய கடைசி நோயாளி சோமாலியாவில் அடையாளம் காணப்பட்டார். உலக சுகாதார அமைப்பு இந்நாளை பெரியம்மையின் கடைசி நாளாக அறிவித்தது.
1979 - தென் கொரியா அதிபர் பார்க் சோங்-ஹீ இராணுவத் தளபதி கிம் ஜே-கியூ என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1984 - "பேபி ஃபே" (Baby Fae) பபூன் என்ற மனிதக் குரங்கிலிருந்து இருதய மாற்றைப் பெற்று 21 நாட்கள் உயிர் வாழ்ந்தது.
1994 - ஜோர்தான் மற்றும் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
1994 - பேர்மாவின் கடைசித் தேற்றம் அண்ட்ரூ வைல்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது என அறிவிக்கப்பட்டது.
1995 - இஸ்லாமிய ஜிகாட் தலைவர் ஃபாதி ஷிக்காகி என்பவர் மோல்டாவில் உள்ள விடுதி ஒன்றில் மொசார்ட் அமைப்பினரால் கொல்லப்பட்டார்.
2000 - ஐவரி கோஸ்ட்டின் அதிபர் ரொபேர்ட் கூயெய் பதவியிறக்கப்பட்டு லோரெண்ட் குபாக்போ என்பவர் அதிபரானார்.
2001 - ஐக்கிய அமெரிக்கா "அமெரிக்க தேசப் பற்று சட்டத்தை" நிறைவேற்றியது.
2002 - மொஸ்கோவில் நாடக மாளிகை ஒன்றில் செச்னியா தீவிரவாதிகள் மூன்று நாட்களாகப் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்தது. 150 பணயக் கைதிகளும் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
2003 - கலிபோர்னியாவில் இடம்பெற்ற தீயில் 15 பேர் கொல்லப்பட்டு 250,000 ஏக்கர், மற்றும் 2,200 வீடுகள் சான் டியேகோ நகரில் அழிந்தன.

பிறப்புக்கள்
1947 - இலரி கிளின்டன், ஐக்கிய அமெரிக்காவின் செனட் அவை உறுப்பினர்
1959 - எவோ மொரல்ஸ், பொலிவியாவின் சனாதிபதி
1985 - அசின், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1985 - மான்ட்டே எலிஸ், அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்

இறப்புகள்
2001 - மரகதம் சந்திரசேகர், இந்தியக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர், முன்னாள் மத்திய அமைச்சர்

சிறப்பு நாள்
ஆஸ்திரியா - தேசிய நாள் (1955)

அக்டோபர் 25 நிகழ்வுகள்

அக்டோபர் 25 நிகழ்வுகள்

1147 - முதலாம் அஃபொன்சோ தலைமையில் போர்த்துகீசர் லிஸ்பன் நகரைப் பிடித்தனர்.
1415 - அஜின்கோர்ட் நகரில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றியின் படைகள் பிரான்சைத் தோற்கடித்தனர்.
1616 - அவுஸ்திரேலியாவில் கால்பதித்த இரண்டாவது ஐரோப்பியர் டச்சு கப்டன் டேர்க் ஹார்ட்டொக். மேற்கு அவுஸ்திரேலியாவில் டேர்க் ஹார்ட்டொக் தீவு அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
1760 - மூன்றாம் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னனானான்.
1900 - ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிக்காவின் டிரான்ஸ்வால் மாநிலத்தை இணைத்துக்கொண்டது.
1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி (பழைய ஜூலியன் நாட்காட்டியின் படி), இடம்பெற்றது. போல்ஷெவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர்.
1918 - அலாஸ்காவில் பிரின்சஸ் சோஃபியா என்ற கப்பல் தாண்டதில் 353 பேர் கொல்லப்பட்டனர்.
1924 - இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் பிரித்தானியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
1935 - எயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
1936 - ஹிட்லர் மற்றும் முசோலினி இணைந்து ரோம்-பேர்லின் அச்சு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினர்.
1944 - இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் வரலாற்றில் பெரும் கடற்சமர் இடம்பெற்றது.
1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கூட்டு நாடுகளிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து சீனக் குடியரசு தாய்வானை இணைத்துக் கொண்டது.
1971 - ஐநாவிலிருந்து சீனக் குடியரசு வெளியேற்றப்பட்டு மக்கள் சீன குடியரசு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1983 - ஐக்கிய அமெரிக்காவும் அதன் கரிபியன் கூட்டு நாடுகளும் கிரெனாடாவை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றின.
1991 - யூகொஸ்லாவிய இராணுவம் சிலவேனியாவில் இருந்து முற்றாக வெளியேறியது.
1995 - கொழும்பு கொலன்னாவை எண்ணெய்க் குதங்களில் இடம்பெற்ற பெரும் தீயில் 21 படையினர் கொல்லப்பட்டனர்.
2000 - பிந்துனுவேவா படுகொலைகள்: இலங்கையில் பண்டாரவளை, பிந்துனுவேவா சிறைகள் மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதலில் தமிழ் அரசியல் கைதிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
2001 - விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.
2001 - இந்தியாவில் தடா சட்டத்துக்கு பதிலாக POTO என்ற புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 23 தீவிரவாத அமைப்புகளுக்கு நடுவண் அரசு தடை விதித்தது.
2007 - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாவது இரட்டை அடுக்கு விமானம் ஏர்பஸ் ஏ380 தனது முதலாவது சேவையை சிட்னிக்கு ஆரம்பிக்கிறது.

பிறப்புக்கள்
1811 - எவரிஸ்ட் கால்வா, பிரெஞ்சு கணிதவியலர் (இ. 1832)
1881 - பாப்லோ பிக்காசோ, ஸ்பானிய ஓவியர், சிற்பி (இ. 1973)
1973 - றசல் பிரேமகுமாரன் ஆர்னோல்ட், இலங்கை துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்
1400 - ஜெஃப்றி சோசர், ஆங்கில இலக்கிய மேதை. (பி 1340)
2005 - நிர்மல் வர்மா, ஹிந்தி எழுத்தாளர் (பி. 1929)
1980 - ஸாகிர் லுதியானவி, ஹிந்தித் திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1921)

சிறப்பு நாள்
கசக்ஸ்தான் - குடியரசு நாள் (1990)

அக்டோபர் 23 நிகழ்வுகள்

அக்டோபர் 23 நிகழ்வுகள்

கிமு 4004 - அங்கிலிக்கப் பேராயர் ஜேம்ஸ் உச்சரின் கணிப்பின் படி அகிலம் படைக்கப்பட்டது.
கிமு 42 - மார்க் அந்தோனி, ஆகுஸ்டஸ் ரோமப் பேரரசன் புரூட்டசின் இராணுவத்தை தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டஸ் தற்கொலை செய்து கொண்டான்.
425 - மூன்றாம் வலன்டீனியன் ஆறாவது அகவையில் ரோமப் பேரரசன் ஆனான்.
1157 - டென்மார்க்கில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மன்னன் மூன்றாம் சுவெயின் கொல்லப்பட்டு முதலாம் வால்டிமார் அரசனானான்.
1707 - பெரிய பிரித்தானியாவின் முதல் நாடாளுமன்றம் கூடியது.
1739 - பிரித்தானியப் பிரதமர் ரொபேர்ட் வால்போல் ஸ்பெயின் மீது போரை அறிவித்தார்.
1870 - பிரான்சின் மெட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இறுதிப் போரில் பிரஷ்யா வெற்றியடைந்தது.
1906 - அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டூமொண்ட் பாரிஸ் நகரில் ஐரோப்பாவின் முதலாவது காற்றை விடப் பாரமான வானூர்தியைப் பறக்க விட்டார்.
1911 - முதற்தடவையாக வானூர்தி ஒன்று போரில் பாவிக்கப்பட்டது: இத்தாலிய வானோடி லிபியாவில் இருந்து புறப்பட்டு துருக்கிய இராணுவ நிலைகளை அவதானித்தான்.
1912 - முதலாம் பால்க்கன் போர்: சேர்பியாவுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.
1915 - நியூயோர்க் நகரில் 25,000-33,000 பெண்கள் வாக்குரிமை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1917 - லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
1941 - உக்ரேனின் ஒடேசா நகரில் 19,000 யூதர்கள், ருமேனிய இராணுவ அதிகாரி நிக்கலாய் டெலியானு தலைமையில் ருமேனியா மற்றும் ஜெர்மன் படையினரால் உயிருடன் எரிக்கப்பட்டனர். அடுத்த நாள் மேலும் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
1942 - ஐக்கிய அமெரிக்க வான்படையின் தாக்குதலுக்கு அமெரிக்கப் பயணிகள் விமானம் ஒன்று இலக்கானதில் அதில் பயணம் செய்த அனைத்துப் 12 பேரும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ரால்ஃப் ரைஞ்சர்என்ற பிரபலமான இசை மேதையும் அடங்குவார்.
1944 - இரண்டாம் உலகப் போர்: மிகப்பெரும் கடற்படைப் போர் பிலிப்பீன்சில் ஆரம்பமாயிற்று.
1944 - இரண்டாம் உலகப் போர்: சோவியத்தின் செம்படைகள் ஹங்கேரியை அடைந்தன.
1946 - ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதலாவது கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் ஆரம்பமாயிற்று.
1956 - ஹங்கேரியப் புரட்சி, 1956: ஹங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். ஹங்கேரியப் புரட்சி நவம்பர் 4இல் நசுக்கப்பட்டது.
1958 - நோவா ஸ்கோசியாவில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 174 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் 100 பேர் மட்டும் நவம்பர் 1 வரையில் மீட்கப்பட்டனர்.
1973 - சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் இடம்பெற்ற யோம் கிப்பூர் போர் ஐநாவின் தலையீட்டை அடுத்து முடிவுக்கு வந்தது.
1983 - லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் பிரெஞ்சு இராணுவத்தினர் 58 பேர் கொல்லப்பட்டனர்.
1989 - கம்யூனிச ஹங்கேரியன் மக்கள் குடியரசு, ஹங்கேரியன் குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.
1991 - ஈழப்போர்: தமிழீழப் போரில் அனாதைகளான பெண் பிள்ளைகளின் மறுவாழ்வுக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது.
1998 - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டனியாகு மற்றும் பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்துக்கும் இடையில் "அமைதிக்காக நிலம்" என்ற உடன்பாடு எட்டப்பட்டது.
2001 - வட அயர்லாந்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் ஐரிஷ் குடியரசு இராணுவம் ஆயுதக் களைவில் ஈடுபட்டது.
2001 - அப்பிள் நிறுவனத்தின் ஐப்பொட் வெளியிடப்பட்டது.
2001 - காஷ்மீர் விமானத் தளத்தைப் தகர்க்கும் தீவிரவாதிகளின் தற்கொலைப் படைமுயற்சி முறியடிக்கப்பட்டது. 4 தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர்.
2002 - மொஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் செச்னிய தீவிரவாதிகளினால் 700 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
2004 - பிரேசில் VSB-30 என்ற தனது முதலாவது விண்கப்பலை விண்ணுக்கு ஏவியது.
2004 - வடக்கு ஜப்பானில் நிலநடுக்கம் தாக்கியதில் 35 பேர் கொல்லப்பட்டு 2,200 பேர் படுகாயமடைந்தனர்.
2006 - இலங்கை சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

பிறப்புக்கள்

1920 - ஃவுஜித்தா, ஜப்பானிய வானிலை அறிஞர் (இ. 1998)
1948 - எம். எச். எம். அஷ்ரப், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தாபகர் (இ. 2000)
1974 - அரவிந்த் அடிகா, இந்தியப் புதின எழுத்தாளர்

இறப்புகள்
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
கிமு 42 - மார்க்கஸ் புரூட்டஸ், ரோமப் பேரரசின் படைத்தலைவன் (பி. கிமு 85)
1986 - எட்வேர்ட் அடெல்பேர்ட் டொய்சி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1893)

சிறப்பு நாள்
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
ஹங்கேரி - தேசிய நாள்
வேதியியல் - மோல் நாள்

அக்டோபர் 22 நிகழ்வுகள்

அக்டோபர் 22 நிகழ்வுகள்

362 - அந்தியோக்கியாவின் "அப்பலோ" ஆலயம் தீப்பற்றி எரிந்தது.
794 - கன்மு பேரரசர் ஜப்பானிய தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது கியோட்டோ) மாற்றினார்.
1383 - போர்த்துக்கல் மன்னன் முதலாம் பேர்டினண்ட்டின் இறப்பின் பின்னர் ஆண் வாரிசு அற்ற நிலையில் நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1633 - மிங் வம்சம் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியுடன் சீனாவின் தெற்கு பூஜியன் கடலில் போரில் ஈடுபட்டு மெரும் வெற்றி பெற்றது.
1692 - மந்திரம் செய்ததற்காக ஐக்கிய அமெரிக்காவில் வழங்கப்பட்ட கடைசி தூக்கு தண்டனை.
1707 - நான்கு பிரித்தானிய கடற்படைக் கப்பல்கள் சிலி தீவுகளில் மூழ்கியதில் ஆயிரக்கணக்கான மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
1784 - இரசியா அலாஸ்காவின் கோடியாக் தீவில் குடியேற்றமொன்றை அமைத்தது.
1935ம் ஆண்டு சோவியத் புரட்சி நாட்காட்டி ஒன்றின் ஆறு-நாள் வாரமொன்றின் அக்டோபர் 22 பக்கம்
1797 - பதிவுச் செய்யப்பட்ட முதலாவது பரசூட் பாய்ச்சல் அன்ட்ரே ஜக்கியுஸ் கர்னெரின் என்பவரால் பாரிஸ் நகருக்கு 3200 அடி மேலாக நிகழ்த்தப்பட்டது.
1844 - பாரிய எதிர்பார்ப்பு: வில்லியம் மில்லரின் படிப்பினைகளைக் பின்பற்றிய மில்லரிய கிறிஸ்தவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையும் உலக முடிவையும் எதிர்பார்த்திருந்தனர்.
1866 - பிரேசில், ஆர்ஜென்டீனா, உருகுவேக்கு எதிராக பராகுவே போரில் ஈடுபட்டது.
1875 - ஆர்ஜென்டீனாவுக்கான முதலாவது தொலைத்தொடர்பு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.
1877 - ஸ்கொட்லாந்தில் பிளான்டையர் சுரங்க விபத்து, 207 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர்.
1878 - செயற்கை ஒளிக்கு கீழ் நடைப்பெற்ற முதலாவது ரக்பி போட்டி இங்கிலாந்தின் சால்போட் நகரில் நடைப்பெற்றது.
1924 - பன்னாட்டு டோஸ்ட்மாஸ்டர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1943 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் காசெல் நகரம் மீது பிரித்தானிய விமானப்படை குண்டுவீச்சு நடத்தியதில் 10,000 பேர் கொல்லப்பட்டு 150,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1944 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஆச்சென் நகரம் நட்பு நாடுகளிடம் வீழ்ந்தது. நட்பு நாடுகளிடம் வீழ்ந்த முதலாவது ஜெர்மன் நகாரம் இதுவாகும்.
1946 - அல்பேனியாவின் கரைக்கு அப்பால் பிரித்தானிய போர்க் கப்பல் கண்ணிவெடியில் சிக்கியதால் 40 பிரித்தானிய கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1949 - சோவியத் ஒன்றியம் அதன் முதலாவது அணுகுண்டை வெடிக்கச் செய்தது.
1953 - லாவோஸ், பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1956 - பாகிஸ்தான், கராச்சியில் கான்கிரீட் கூரைப் பாகம் வீழ்ந்ததில் 48 பேர் பலி.
1957 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் முதல் போர்ச் சாவு.
1960 - மாலி, பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1964 - பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவுச் செய்தது.
1964 - சான்-போல் சார்ட்ரேக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்காப்பட்டது, எனினும் அவர் அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
1965 - இந்தியா-பாகிஸ்தான் இடையான இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.
1968 - நாசாவின் அப்பல்லோ 7 விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பின்னர் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
1970 - துங்கு அப்துல் ரகுமான் மலேசியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
1987 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் அராலித் துறையில் இந்திய அமைதிப் படையின் உலங்குவானூர்தி தாக்கியதில் பல பயணிகள் கொல்லப்பட்டனர்.
2001 - PSLV C-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
2007 - எல்லாளன் நடவடிக்கை: இலங்கையின் அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் கரும்புலிகள் 21 பேரும், இலங்கை படையினர் 14 பேரும் கொல்லப்பட்டு பல வானூர்திகள் அழிக்கப்பட்டன.

பிறப்புக்கள்
1919 - டோரிஸ் லெஸ்சிங், 2007 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர்

இறப்புகள்
1906 - பால் செசான், பிரெஞ்சு ஓவியர் (பி. 1839)
1925 - அ. மாதவையா, தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர் (பி.1872)

அக்டோபர் 21 நிகழ்வுகள்

1520 - பேர்டினண்ட் மகெலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகலன் நீரிணை எனப் பெயர்பெற்றது.
1805 - டிரபல்கார் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் ஸ்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது.
1805 - ஊல்ம் என்ற இடத்தில் ஆஸ்திரியா நெப்போலியனின் பெரும் இராணுவத்திடம் சரணடைந்தது. நெப்போலியன் 30,000 பேரைச் சிறைப்பிடித்தான்.
1824 - ஜோசப் ஆஸ்ப்டின் போர்ட்லண்ட் சிமெந்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1837 - அமெரிக்கப் பழங்குடித் தலைவன் ஒசியோலா கைது செய்யப்பட்டான்.
1854 - புளோரன்ஸ் நைட்டிங்கேல் மற்றும் 38 தாதிகள் கிரிமியன் போர் முனைக்கு அனுப்பப்பட்டனர்.
1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பினரிடம் வேர்ஜீனியாவில் தோற்றனர். ஆபிரகாம் லிங்கனின் நெருங்கிய நண்பர் "எட்வேர்ட் பேக்கர்" கொல்லப்பட்டார்.
1876 - யாழ்ப்பாணத்தில் காலரா நோய் வேகமாகப் பரவியது.
1879 - தொமஸ் எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழைப் பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது.
1892 - உலக கொலம்பியக் கண்காட்சி சிக்காகோவில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட வேலைகள் பூர்த்தியடையாத காரணத்தால் இக்கண்காட்சி 1893, மே 1 ஆம் நாளிலேயே பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
1895 - ஜப்பானியப் படைகளின் முற்றுகையினால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது.
1944 - கிறகுஜேவாச் படுகொலைகள்: நாசி ஜெர்மனியப் படைகள் 7000 சேர்பியரை படுகொலைச் செய்தனர்.
1944 - இரண்டாம் உலகப் போர்: முதலாவது கமிகசே ஜப்பானிய விமானத் தற்கொலைத் தாக்குதல், அவுஸ்திரேலிய கப்பல் மீது நடத்தப்பட்டது.
1945 - பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1966 - வேல்சில் அபெர்ஃபான் என்னும் கிராமத்தில் நிலக்கரி கழிவுகள் அடங்கிய பாறை வீழ்ந்ததில் 116 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட 144 பேர் கொல்லப்பட்டனர்.
1969 - சோமாலியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சியாட் பார் பதவியைக் கைப்பற்றினார்.
1983 - நிறைகளுக்கும் அளவைகளுக்குமான 17வது அனைத்துலகக் கருத்தரங்கில், முழுமையான வெற்றிடத்தில், துல்லியமாக 1/299,792,458 வினாடி நேரத்தில் ஒளி செல்லும் பாதையின் நீளமாக ஒரு மீட்டர் வரையறுக்கப்பட்டது.
1987 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இந்திய இராணுவத்தினர் சுட்டதில் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் உட்பட 21 பேர் கோல்லப்பட்டனர்.
1994 - சியோல் நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
2003 - குறுங்கோள் ஏரிசின் படங்கள் எடுக்கப்பட்டன.

பிறப்புக்கள்
1833 - அல்பிரட் நோபல், சுவீடன் நாட்டு கண்டுபிடிப்பாளர், நோபல் பரிசை ஆரம்பித்தவர் (இ 1896)
1925 - சுர்ஜித் சிங் பர்னாலா, இந்திய அரசியல்வாதி
1937 - தேங்காய் சீனிவாசன், தமிழ் நாடக, திரைப்பட நடிகர், (இ 1988)

இறப்புகள்
1835 - முத்துசுவாமி தீட்சிதர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (பி. 1776)

சிறப்பு நாள்
ஆப்பிள் நாள்

அக்டோபர் 24 நிகழ்வுகள்



அக்டோபர் 24 நிகழ்வுகள்

1260 - சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது.
1260 - எகிப்திய சுல்தான் சாயிஃப் ஆட்-டின் குத்தூஸ், பாய்பேர்ஸ் என்பவனால் கொலை செய்யப்பட்டான். பாய்பேர்ஸ் நாட்டின் சுல்தான் ஆனான்.
1648 - வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
1795 - போலந்து-லித்துவேனியன் கூட்டமைப்பு முற்றாகக் கலைக்கப்பட்டு ஆஸ்திரியா, பிரஷ்யா, மற்றும் ரஷ்யா ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.
1801 - மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
1806 - பிரெஞ்சுப் படைகள் பெர்லின் நகரை அடைந்தன.
1851 - யுரேனஸ் கோளின் சந்திரன்கள் ஏரியல், உம்பிரியல் ஆகியன வில்லியம் லாசெல் என்பவாரால் கண்டறியப்பட்டது.
1857 - உலகின் முதலாவது காற்பந்தாட்ட அணியான ஷெஃபீல்ட் காற்பந்தாட்ட அணி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1912 - முதலாம் பால்க்கன் போர்: குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் சேர்பியா வெற்றி பெற்றது.
1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது.
1929 - கறுப்பு வியாழன்: நியூயார்க் பங்குச் சந்தையில் பங்குகள் சரிவு.
1930 - பிரேசிலில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. அதிபர் "லூயிஸ் பெரெய்ரா டெ சயூசா" பதவியுல் இருந்து அகற்றப்பட்டார்.
1931 - ஜோர்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது.
1935 - இத்தாலி எதியோப்பியாவைக் கைப்பற்றியது.
1943 - நாடு கடந்த இந்திய அரசு முறைப்படி பிரித்தானியா மீதும் அமெரிக்கா மீதும் போரை அறிவித்தது.
1945 - ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1960 - சோவியத் ஒன்றியத்தின் பாய்க்கனூர் விண்தளத்தில் R-16 ஏவுகணை வெடித்ததில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
1964 - வடக்கு றொடீசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சாம்பியா என்னும் பெயரைப் பெற்றது.
1973 - யோம் கிப்பூர்ப் போர் முடிவுக்கு வந்தது.
1994 - கொழும்பில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்கா மற்றும் 51 பேர் கொல்லப்பட்டனர்.
2003 - கான்கோர்டு விமானம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.
2007 - சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் 'சாங்-ஒன்று' தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

பிறப்புக்கள்
1632 - ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு உயிரியலாளர் (இ. 1723)
1921 - ஆர். கே. லட்சுமண், இந்திய ஓவியர்
1932 - இசுடீபன் கோவே, அமெரிக்க எழுத்தாளர் (இ. 2012)
1934 - அர்விந்த் ஆப்டே, இந்தியத் துடுப்பாட்டக்காரர்
1957 - இ. ஜெயராஜ், இலங்கை கம்பன் கழக அமைப்பாளர்
1971 - மல்லிகா செராவத், இந்திய நடிகை
1983 - தீபச்செல்வன், ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர்
1985 - வேனே ரூனி, இங்கிலாந்து கால்பந்து ஆட்டக்காரர்
1985 - வேனே ரூனி, ஆங்கிலேயக் கால்பந்தாட்டக்காரர்

இறப்புகள்
1601 - டைக்கோ பிரா, டேனிய வானியலாளர் (பி. 1546)
1870 - அந்தோனி மரிய கிளாரட், ஸ்பானிய, ரோமன் கத்தோலிக்க மறைப்போதகர் (பி. 1807)
1972 - ஜாக்கி ராபின்சன், அமெரிக்க பேஸ்பால் விளையாட்டு வீரர் (பி. 1919)
1994 - காமினி திசாநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (பி. 1942)
2005 - றோசா பாக்ஸ், ஆபிரிக்க அமெரிக்க குடியுரிமைகள் செயற்பாட்டாளர் (பி. 1913)
2011 - ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்கக் கணினி அறிவியலாளர், உணரறிவியலாளர் (பி. 11927)
2013 - மன்னா டே, இந்தித் திரைப்படப் பாடகர் (பி. 1919)
2014 - எஸ். எஸ். ராஜேந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1928)

சிறப்பு நாள்
சாம்பியா - விடுதலை நாள் (1964)
ஐக்கிய நாடுகள் நாள் (1945)