Thursday, November 20, 2014

நவம்பர் 21 நிகழ்வுகள்

நவம்பர் 21 நிகழ்வுகள்
*********************************


1272 - மூன்றாம் ஹென்றி நவம்பர் 16 இல் இறந்ததையடுத்து அவனது மகன் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.
1789 - வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் 12வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
1791 - நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சு இராணுவத்தின் தளபதியானான்.
1877 - ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராஃப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தோமஸ் எடிசன் அறிவித்தார்.
1894 - சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறைமுகத்தை ஜப்பான் கைப்பற்றியது.
1905 - ஆற்றலுக்கும் திணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை அல்பேர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார்.
1916 - பிரித்தானியக் கப்பலான HMHS பிரித்தானிக் கிரேக்கத்தில் ஏஜியன் கடலில் வெடித்து மூழ்கியதில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
1920 - டப்ளினில் காற்பந்துப் போட்டி நிகழ்வொன்றில் பிரித்தானியப் படையினர் சுட்டதில் 14 ஐரிஷ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1942 - அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
1947 - இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. "ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா.
1962 - சீன மக்கள் விடுதலை இராணுவம் இந்தோ-சீனப் போரில் போர் நிறுத்தம் செய்வதாக ஒருதலைப் பட்சமாக அறிவித்தது.
1963 - பாரதத்தின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அபாச்சி (Nike Apache) ஏவப்பட்டது.
1969 - முதலாவது ஆர்ப்பநெட் (ARPANET) தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
1969 - ஓக்கினாவா தீவை 1972 இல் ஜப்பானியரிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜப்பான் பிரதமர் ஐசாக்கு சாட்டோவுக்கும் இடையில் வாஷிங்டனில் கையெழுத்திடப்பட்டது.
1971 - வங்காள தீவிரவாதக் குழுவான முக்தி பாஹினியின் உதவியுடன் இந்திய படைகள் கரிப்பூர் என்ற இடத்தில் பாகிஸ்தான் படைகளைத் தோற்கடித்தன.
1974 - பேர்மிங்ஹாமில் ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரின் குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
1980 - தமிழீழத் தேசியக்கொடி உருவாக்கப்பட்டது.
1980 - நெவாடாவில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 87 பேர் கொல்லப்பட்டு 650 பேர் காயமடைந்தனர்.
1990 - புலிகளின் குரல் வானொலி தொடங்கப்பட்டது.
1990 - மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.
1996 - புவேர்ட்டோ ரிக்கோவில் சான் ஜுவான் நகரில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
2004 - டொமினிக்காத் தீவில் இடம்பெற்ற நிலநடுக்கம் போர்ட்ஸ்மவுத் நகரில் பலத்த சேதத்தை விளைவித்தது.

பிறப்புக்கள்
1694 - வோல்ட்டயர், பிரெஞ்சு மெய்யியலாளர் (இ. 1778)
1902 - ஐசக் பாஷவிஸ் சிங்கர், போலந்து-அமெரிக்க எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1991)
1924 - மில்கா பிலானிஞ்ச், முன்னாள் யுகோசுலாவியப் பிரதமர் (இ. 2010)
1925 - வேல்ஜ்கோ கடிஜேவிக், முன்னாள் யுகோசுலாவிய இராணுவத் தளபதி
1931 - ரேவாஸ் தொகொனாத்சே, ஜோர்ஜிய அறிவியலாளர், (இ. 1985)
1948 - மைக்கல் சுலைமான், முன்னாள் லெபனானிய அரசுத்தலைவர்
1970 - ஜஸ்டின் லாங்கர், முன்னாள் ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்
1970 - சி. வி. இராமன் இந்திய பௌதிகவியலாளரும், நோபல் பரிசு
பெற்றவரும் (பி. 1888)
1996 - அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானியர் (பி. 1926)

சிறப்பு நாள்
உலகத் தொலைக்காட்சி நாள்
தமிழீழம் - தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்
வங்காள தேசம் - இராணுவத்தினர் நாள்

No comments:

Post a Comment