Sunday, November 16, 2014

நவம்பர் 16 நிகழ்வுகள்

நவம்பர் 16 நிகழ்வுகள்
*************************************
1384 - பெண்ணாக இருந்தாலும் பத்து வயது "ஜாட்வீகா" என்பவள் போலந்தின் மன்னனாக முடிசூடினாள்.
1532 - ஸ்பானியத் தளபதி பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசின் மன்னன் அட்டஹுவால்பாவைத் தோற்கடித்து சிறைப்பிடித்தான்.
1632 - சுவீடனின் குஸ்டாவிஸ் அடோல்பஸ் போரில் கொல்லப்பட்டான்.
1846 - இலங்கையில் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1849 - அரசுக்கெதிராகப் புரட்சி செய்ததாகக் குற்றம் சாட்டி ரஷ்ய எழுத்தாளரான பியோதர் தஸ்தயெவ்ஸ்கிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் தண்டனை பின்னர் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது.
1885 - கனடாவின் மேட்டிஸ் பழங்குடித் தலைவர் லூயிஸ் ரியெல் தூக்கிலிடப்பட்டார்.
1896 - முதற்தடவையாக மின்சாரம் மின்னாக்கி ஒன்றிலிருந்து நகருக்கு அனுப்பப்பட்டது. இது நடந்தது நியூ யோர்க் நகரில்.
1904 - ஜோன் பிளெமிங் வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார்.
1907 - ஒக்லகோமா ஐக்கிய அமெரிக்காவின் 46வது மாநிலமாக இணைந்தது.
1920 - ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை குவாண்டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.
1933 - ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஆரம்பித்தன.
1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் விமானப் படைகள் ஜெர்மனியின் ஹாம்பேர்க் நகரில் குண்டுகளை வீசின.
1944 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் டியூரென் நகரம் கூட்டுப் படைகளின் குண்டுத் தாக்குதலில் முற்றாக அழிந்தது.
1945 - யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1945 - பனிப்போர்: ஐக்கிய அமெரிக்காவின் இராணுவம் ஜெர்மனியின் அறிவியலாளர்கள் 88 பேரை தனது வானியல் தொழில்நுட்பத்தில் உதவுவதற்காக இரகசியமாக நாட்டுக்குள் அனுமதித்தது.
1965 - சோவியத்தின் வெனேரா 3 விண்கப்பல் வெள்ளி கோளுக்கு செலுத்தப்பட்டது. வேறொரு கோளின் தரையை அடைந்த முதலாவது விண்கப்பல் இதுவாகும்.
1973 - நாசா மூன்று விண்வெளி வீரர்களுடன் ஸ்கைலாப் 4 84-நாள் திட்டத்தில் விண்ணுக்கு அனுப்பியது.
1988 - சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல்களில் பெனசீர் பூட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2002 - சார்ஸ் நோய் முதன் முதலில் சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில் பதியப்பட்டது.

பிறப்புக்கள்
1922 - ஜோசே சரமாகூ, நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கேய எழுத்தாளர்
1930 - சின்னுவ அச்சிப்பே, நைஜீரிய எழுத்தாளர்
1982 - அமாரே ஸ்டெளடமையர், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்
1999 - டானியல் நேத்தன்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1928)
2006 - மில்ட்டன் ஃப்ரீட்மன், நோபல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணர் (பி. 1912)


சிறப்பு நாள்
உலக சகிப்புத் தன்மை நாள்

No comments:

Post a Comment