Wednesday, October 1, 2014

அக்டோபர் 2 நிகழ்வுகள்*

  • அக்டோபர் 2 நிகழ்வுகள்*


  • 1187 - 88 ஆண்டுகள் சிலுவைப் போரின் பின்னர் எகிப்திய சுல்தான் சலாதீன் ஜெருசலேமைக் கைப்பற்றினான்.
  • 1263 - நோர்வேக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
  • 1535 - ஜாக் கார்ட்டியே மொண்ட்றியாலைக் கண்டுபிடித்தார்.
  • 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படையினர் வேர்ஜீனியாவின் சால்ட்வில் நகரைத் தாக்கினர். ஆனாலும் அவர்கள் கூட்டமைப்பினரால் விரட்டப்பட்டனர்.
  • 1870 - ரோம் மீண்டும் இத்தாலியுடன் இணைவதற்கு ஆதரவாக மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தனர்.
  • 1903 - யாழ்ப்பாணத்தில் Jaffna Steam Navigation Company என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான "SS Jaffna" என்ற பயணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.
  • 1935 - இத்தாலி அபிசீனியாவைக் கைப்பற்றியது.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனிப் படைகள் மாஸ்கோவுக்கு எதிரான தமது மூன்று மாதத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
  • 1946 - பல்கேரியா கம்யூனிஸ்டுகளின் வசமாகியது.
  • 1958 - கினி பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1968 - மெக்சிகோவில் இடம்பெற்ற மாணவர்களின் அமைதிப் போராட்டத்தின் முடிவில் நூற்றக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
  • 1990 - சீனாவின் போயிங் விமானம் கடத்தப்பட்ட பின்னர் அது குவாங்சூ விமானநிலையத்தில் தரையிறங்கும் போது தரையில் நின்ற இரு விமானங்களுடன் மோதியதில் 132 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1992 - பிரேசிலில் சிறைக்கைதிகளின் போராட்டம் ஒன்றின் போது 111 கைதிகள் சுட்டுக் கொல்லபட்டனர்.
  • 1996 - பெருவில் விமானம் ஒன்று பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2005 - நியூயோர்க்கில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2006 - பென்சில்வேனியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 5 மாணவிகள் கொல்லப்பட்டனர்.

  • பிறப்புக்கள்
  • 1800 - நாட் டர்னர், அமெரிக்க அடிமைக் கிளர்ச்சித் தலைவர் (இ. 1831)
  • 1869 - மகாத்மா காந்தி, (இ. 1948)
  • 1904 - லால் பகதூர் சாஸ்திரி, இந்தியப் பிரதமர், (இ. 1966)
  • 1908 - டி. வி. இராமசுப்பையர், தினமலர் நாளிதழின் நிறுவனர் (இ. 1984)
  • 1925 - ஆன் றணசிங்க, ஆங்கிலேய யூதப் பெண் எழுத்தாளர்
  • 1965 - டொம் மூடி ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்

  • இறப்புகள்

  • 1906 - ராஜா ரவி வர்மா, இந்தியாவின் பிரபல ஓவியர் (பி. 1848)
  • 1975 - காமராஜர், இந்திய அரசியல் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் (பி. 1903)
  • 1980 - சேர் ஜோன் கொத்தலாவல, இலங்கை அரசியல் தலைவர்.

  • சிறப்பு நாள்
  • இந்தியா - காந்தி ஜெயந்தி
  • கினி - விடுதலை நாள் (1958)
  • அனைத்துலக வன்முறையற்ற நாள்

No comments:

Post a Comment