Saturday, October 4, 2014

அக்டோபர் 7 நிகழ்வுகள்

1690 - ஆங்கிலேயர் கியூபெக் நகரைத் தாக்கினர்.
1737 - இந்தியா, வங்காளத்தில் கிளம்பிய 40 அடி உயர அலை சுமார் 300,000 பேரைக் கொன்றது.
1769 - ஆங்கிலேய நாடுகாண் பயணி கப்டன் ஜேம்ஸ் குக் நியூசிலாந்தைக் கண்டுபிடித்தான்.
1806 - ஆங்கிலேயர் ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாள் காப்புரிமம் பெறப்பட்டது.
1840 - இரண்டாம் வில்லியம் நெதர்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1874 - யாழ்ப்பாணத்துக்கான தந்தி இணைப்பு அநுராதபுரம் வரையில் நீடிக்கப்பட்டது.
1919 - நெதர்லாந்தின் கே.எல்.எம் விமானசேவை ஆரம்பிக்கப்பட்டது.
1940 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனி ருமேனியாவைத் தாக்கியது.
1942 - அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஐக்கிய நாடுகள் அவையை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தன.
1943 - இரண்டாம் உலகப் போர்: வேக் தீவில் கைப்பற்றப்பட்ட அமெரிக்கக் கைதிகள் 100 பேரை ஜப்பான் கொன்றது.
1944 - இரண்டாம் உலகப் போர்: அவுஷ்விட்ஸ் வதை முகாமில் யூதக் கைதிகளின் கிளர்ச்சி இடம்பெற்றது.
1949 - ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டது.
1950 - சீனா திபெத்து மீதான தாக்குதலை ஆரம்பித்தது.
1951 - மலேயத் தீவிரவாதிகள் பிரித்தானிய தூதுவர் சேர் ஹென்றி கேர்னி என்பவரைக் கொன்றனர்.
1951 - இஸ்ரேலிய அரசு டேவிட் பென்-கூரியன் என்பவரால் அமைக்கப்பட்டது.
1958 - பாகிஸ்தான் அதிபர் இஸ்காண்டர் மிர்சா ஜெனரல் அயூப் கான் ஆதரவுடன் 1956 அரசமைப்பை நிராகரித்து இராணுவ ஆட்சியைக் கொண்டுவந்தார்.
1959 - சோவியத் விண்கலம் லூனா 3 சந்திரனின் அதி தூரத்தியப் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.
1962 - சோவியத் ஒன்றியம் நோவயா சிம்லியா என்ற இடத்தில் அணுக்கரு சோதனையை நிகழ்த்தியது.
1963 - எயிட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகியவற்றை சூறாவளி ஃபுளோரா தாக்கியதில் 7,190 பேர் கொல்லப்பட்டனர்.
2001 - ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா மூன்று முறை விமானத்தாக்குதல் நடத்தியது. வலிமையான கான்கீரிட் கட்டிடங்களையும் ஊடுருவி தாக்கும் டொமஹாக் ரகஏவுகணைகளை ஏவியது.
2004 - கம்போடியாவின் நொரொடொம் சிஹானூக் மன்னர் பதவியில் இருந்து விலகினார்.

பிறப்புக்கள்
1931 - டெஸ்மண்ட் டூட்டு, தென்னாபிரிக்க ஆயர், நோபல் பரிசு பெற்றவர்
1935 - தாமஸ் கெநீலி, ஆத்திரேலிய எழுத்தாளர்
1952 - விளாடிமிர் பூட்டின், ரஷ்ய முன்னாள் அதிபர்
1978 – சகீர் கான் , இந்திய வேகபந்து வீச்சாளர்.
1979 - நரேன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

இறப்புகள்
1708 - குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு (பி. 1666)
1967 - நோர்மன் ஏஞ்செல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1872)
1974 - சி. மு. இராசமாணிக்கம், முன்னாள் இலங்கைத் தமிழரசுக் கட்சி பட்டிருப்பு பாராளுமன்ற உறுப்பினர்
1984 - அப்துல் காதர் லெப்பை, ஈழத்துக் கவிஞர் (பி. 1913)

1994 - நீல்ஸ் காஜ் ஜேர்ன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)

சிறப்பு நாள்
கிழக்கு ஜேர்மனி - குடியரசு நாள்

No comments:

Post a Comment